பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை.. தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை.. 86 ஆயிரம் சம்பளம்.. விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் (Punjab National Bank job) உள்ளூர் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 750 பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.86 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இது தொடர்பான விவரங்களை இங்கு பார்க்கலாம்.

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் சுமார் 635 வங்கி கிளைகள் உள்ளன. பொதுத்துறை வங்கி என்பதல் இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கும்.

job bank job employment

இதனால், பஞ்சாப் நேஷனல் வங்கியில் வெளியிடும் தேர்வு அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில்தான், 750 உள்ளூர் அதிகாரி பணியிடங்களை நிரப்ப பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. ஆந்திரப் பிரதேசம் - 80
2. சத்தீஸ்கர் - 40
3. குஜராத் - 100
4. இமாச்சலப் பிரதேசம் - 30
5. ஜார்க்கண்ட் - 35
6. கர்நாடகா - 65
7. மகாராஷ்டிரா - 100
8. ஒடிசா - 85
9. பாண்டிச்சேரி - 05
10. பஞ்சாப் - 60
11. தமிழ்நாடு - 85
12. தெலுங்கானா - 50
13. அசாம் - 15

என மொத்தம் 750 உள்ளூர் அதிகாரி பணியிடங்கள் நிரப்ப படுகின்றன.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வங்கி துறையில் பணியாற்றிய அனுபவமும் கோரப்பட்டுள்ளது. அரசு பொதுத்துறை வங்கி அல்லது பிராந்திய ஊரக வங்கிகளில் குறைந்தபட்சம் 18 மாதம் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய அனுபவம் அவசியம்.

விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். அதாவது தமிழகத்தில் உள்ள பணியிடம் என்றால் தமிழ் தெரிந்து இருப்பது அவசியம். கேரளாவில் உள்ள பணியிடம் என்றால் மலையாளம் தெரிந்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

உள்ளூர் அதிகாரி பணிக்கு 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 02.08.1995 முன்பாகவோ, 01.08.2005 க்கு பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் சலுகைகளும் உண்டு.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.48,480 - 85,920 /- வரை கிடைக்கும். தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்து தேர்வு, விண்ணப்பங்கள் பரிசீலனை, நேர்முகத்தேர்வு ஆகியவை அடிப்படையில் தேர்வு நடைபெறும். நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் ரூ. 850 ஆகும், எஸ்சி / எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 04.09.2025 கடைசி நாளாகும். தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறும்.

தேர்வுஅறிவிப்பினை படிக்க: https://punjabandsindbank.co.in/system/uploads/recruitment/2150_2025081923160345540.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+