RRB Group D: ரயில்வேயில் 32,438 பேருக்கு வேலை.. இன்றே கடைசி நாள்! மறந்துடாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்த ஆர் ஆர் பி குரூப் டி பணியிடங்களை நிரப்ப ரயில்வே கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. 32,438 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியான நிலையில், இந்த பணியிடங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள். இன்றுடன் கால அவகாசம் முடிவடைகிறது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை அமைப்பான இந்தியன் ரயில்வேயில் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தேர்வர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஆர் ஆர் பி குரூப் டியில் 32,438 காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியாகி இருந்தது. முதலில் பிப்ரவரி 22 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி என்று இருந்த நிலையில், மார்ச் 1 ஆம் தேதி விண்ணப்பிக்க கால அவகாசம் அதிகரிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான விவரங்களை இங்கு பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
டிராக் மெயிண்டர்ன் (குரூப் - 4) - 13,187
டிராபிக் பாயிண்ட்ஸ்மேன் பி - 5,058
அஸிஸ்டண்ட் (ஒர்க்-ஷாப் மெக்கானிக்கல்) - 3077
மெக்கானிக்கல் அஸிஸ்டண்ட் (C&W) - 2,587
எலக்ட்ரிக்கல் அஸிஸ்டண்ட் டிஆர்டி - 1,381
அஸிஸ்டண்ட் லோகோ (எலக்ட்ரிக்கல்) - 950
என்ஜினியரிங் அஸிஸ்டண்ட் (டிராக் மிஷின்) - 799
அஸிஸ்டண்ட் ஆபரேஷன்ஸ் (எலக்ட்ரிக்கல்) - 744
அஸிஸ்டண்ட் லோகோ (Diesel) - 420
அஸிஸ்டண்ட (P-Way) - 247 உள்பட மொத்தம் 32,438 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி: கல்வித் தகுதியை பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது தேசிய அப்ரெண்ட்டீஸ் சான்றிதழ் வைத்து இருப்பவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ படித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை ஜனவரி 1, 2025 அன்று தேதிப்படி 18 வயது நிரம்பியவர்கள் முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி / எஸ்டி பிரிவினர் 5 ஆண்டுகள் வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் என அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப சம்பளமாக ரூ.18,200 வழங்கப்படும். அலவன்ஸ் எல்லாம் சேர்த்து மாதம் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 22,500 - ரூ.25,380 மாதச் சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை, 4 கட்ட தேர்வுகளாக நடைபெறும். முதலில் கணிணி வழியிலான கொள்குறி தேர்வு (சிபிடி) ஆன்லைன் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?: ஆன்லைன் வழியாகவே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்த பிறகு விண்ணப்ப கட்டணமும் ஆன்லைன் வழியாக கட்ட வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி விண்ணப்பதாரருக்கே அளிக்கப்படும். பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 ஆகும். தேர்வு எழுதிய பின்னர் அவர்களுக்கு முழு தொகையும் அப்படியே திருப்பி அளிக்கப்படும்.
இன்றே கடைசி நாள்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். பிப்ரவரி 22 ஆம் தேதி தான் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு இருந்தது. இதன்படி இன்று (1.03.2025) இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள். இதற்கு பிறகு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்ப படிவத்தில் திருத்தம் மேற்கொள்ள வரும், 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.rrbapply.gov.in/#/auth/landing
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications