எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை.. 327 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்! விட்றாதீங்க
சென்னை: எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஓ எனப்படும் சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 327 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றது. ஆண்டிற்கு ரூ.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த சான்சை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணியாற்ற வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது. அரசு பொதுத்துறை வங்கி என்பதால் இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம் + சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

பணியிடங்கள் விவரம்:
இதனால் எஸ்பிஐ வங்கி நடத்தும் தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து தேர்வர்கள் காத்துக்கிடக்கிறார்கள். ஸ்டேட் வங்கியை பொறுத்தவரை அவ்வப்போது உரிய அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்கிறது. ஐபிபிஎஸ் தேர்வு இன்றி ஸ்டேட் வங்கி தனியாகவே தேர்வு நடத்தி ஆட்சேர்ப்பு பணிகளை நடத்துகிறது.
அந்த வகையில் தற்போது ஸ்டேட் வங்கியில் எஸ்.ஓ எனப்படும் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு போன்ற விவரங்களை பார்க்கலாம்.
WP Wealth (SRM) - 582
AVP Wealth (RM) - 237
வாடிக்கையாளர் தொடர்பு எக்ஸியூட்டிவ் - 327
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து எம்பிஏ (பேங்கிங்/நிதி/மார்க்கெட்டிங்) முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். பொதுத்துறை/ தனியார்/ நிதி சார்ந்த நிறுவனங்களில் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வாடிக்கையாளார் தொடர்பு அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதும். நல்ல கம்யூனிகேஷன் திறன் மற்றும் நிதி சார்ந்த பிரிவுகளின் ஆவணப்படுத்துதல் பிரிவில் பணியாற்றியிருந்தால் முன்னுரிமை தரப்படும்.
வயது வரம்பு:
VP Wealth (SRM) - பணியிடத்திற்கு 26 வயது முதல் 42 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
AVP Wealth (RM) - பணிக்கு 23 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வாடிக்கையாளர் தொடர்பு எக்ஸியூட்டிவ் பணிக்கு 20 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்.
அரசு விதிமுறைகளின்படி, எஸ்சி/எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் (பொது/EWS) விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள்(OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. முன்னாள் ராணுவத்தினருக்கும் அரசு விதிகளின் படி தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
VP Wealth (SRM): ரூ. 44.70 லட்சம் (ஆண்டுக்கு)
AVP Wealth (RM): ரூ. 30.20 லட்சம்
வாடிக்கையாளர் தொடர்பு எக்ஸியூட்டிவ் - ரூ. 6.20 லட்சம்
தேர்வு முறை
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு, மற்றும் சம்பளம் தொடர்பான பேச்சுகளுக்குப் பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. https://sbi.bank.in என்ற இணையளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இன்று தான் (10.01.2026.) கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications