ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், உபகோவில்களில் வேலை! எழுத படிக்கத் தெரிந்தால் போதும்! சூப்பர் வாய்ப்பு!
திருச்சி: தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலும், அதனுடன் இணைந்த உபகோயில்களிலும் பல்வேறு பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் வரும் நவம்பர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த வேலைகள் அனைத்தும் இந்து சமய அறநிலையச் சட்ட விதிகளுக்குட்பட்டு நிரப்பப்படவுள்ளன. மொத்தத்தில் 30க்கும் மேற்பட்ட பணியிடங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதில் இளநிலை உதவியாளர், கூர்க்கா, திருவலகு, கால்நடை பராமரிப்பாளர், பெரிய சன்னதி உடல், வீரவண்டி, சோமக்கலம், தாயார் சன்னதி வீரவண்டி, உதவி யானைப்பாகன், சலவையாளர், கூட்டுபவர் போன்ற பணிகள் அடங்கும்.
இளநிலை உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான மாத சம்பளம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூர்க்கா, திருவலகு, கால்நடை பராமரிப்பாளர் போன்ற பணிகளுக்கு தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கான மாத சம்பளம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அரங்கநாதசுவாமி கோயில் வேலை
பெரிய சன்னதி மற்றும் தாயார் சன்னதி வாத்தியப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட இசைப் பள்ளிகளில் இதற்கான பயிற்சி பெற்றிருக்க வேண்டும். உதவி யானைப் பாகன் பணிக்கு யானையை கட்டுப்படுத்தி, வழிநடத்தும் அனுபவமும், அதற்கான கட்டளைகளை வழங்கும் திறனும் இருக்க வேண்டும். இதற்கான சம்பளம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை வழங்கப்படும். மேலும் சலவையாளர் மற்றும் கூட்டுபவர் பணிகளுக்கான தகுதி, தமிழில் படிக்க எழுத தெரிந்திருப்பது மட்டுமே போதுமானது.
திருச்சி கோயில் பணியிடம்
கூட்டுபவர் பணிக்கு மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் வசிக்கும் காவல் நிலையம் வழங்கும் "குற்ற வழக்குகள் இல்லை" என்ற சான்றிதழும் சேர்க்கப்பட வேண்டும். அனைத்து சான்றிதழ்களும் உண்மைத்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீரங்கம் கோயில் அறிவிப்பு
விண்ணப்பதாரர்கள் திருக்கோயிலின் இணையதளமான https://srirangamranganathar.hrce.tn.gov.in இல் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்:
இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி - 620006.
விண்ணப்ப கடைசி தேதி
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் 25.11.2025 ஆகும். வேலை வாய்ப்புகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப விவரங்களை அலுவலகத்தில் நேரடியாகவும் அல்லது இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவம் மற்றும் இதர நிபந்தனைகளை அலுவலக வேலை நேரங்களில் தெரிந்து கொள்ளலாம். அல்லது https://srirangamranganathar.hrce.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications