SSC constable job: கான்ஸ்டபிள் வேலை.. மாதம் 69,000 சம்பளம்.. எஸ்எஸ்சி வெளியிட்ட செம அறிவிப்பு.. 7,000 காலிப்பணியிடங்கள்
சென்னை: ஸ்டாப் செலெக்ஷன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி-யில் போலீஸ் கான்ஸ்டபிள் (SSC constable job) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆண்கள், பெண்கள் என மொத்தம் 7,565 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளம் வழங்கப்படும்.
ஸ்டாப் செலெக்ஷன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு பணிகளில் சேர்ந்துவிட வேண்டும் என்ற லட்சியக் கனவுடன் படித்து வரும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் எஸ்.எஸ்.சி வெளியிடும் தேர்வு அறிவிப்பினை ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருப்பார்கள்.

7,565 கான்ஸ்டபிள் பணியிடங்கள்
கை நிறைய சம்பளம், நல்ல சலுகை உள்ளிட்டவை கிடைக்கும் மத்திய அரசு பணியில் சேர வேண்டும் என்ற கனவு பலருக்கும் உள்ளது. இந்த சூழலில்தான், தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த அறிவிப்புகளில் ஒன்றை எஸ்.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதாவது எஸ்.எஸ்.சி 7,565 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
கான்ஸ்டபிள் (Executive) ஆண் - 4408
கான்ஸ்டபிள் ஆண் [முன்னாள் படைவீரர்கள் (மற்றவர்கள்)] - 285
கான்ஸ்டபிள் ஆண் [முன்னாள் படைவீரர்கள் (கமாண்டோ)] - 376
கான்ஸ்டபிள் பெண் - 2496
என மொத்தம் 7565 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரை 21.10.2025 தேதியின் படி 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அதாவது விண்ணப்பதாரர்கள் ஜூலை 02, 2000 க்கு முன்பாகவோ, ஜூலை 01, 2007 க்கு பிறகே பிறந்தவர்களாக இருக்க கூடாது. அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்புழு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
7-வது ஊதிய கமிஷன்படி லெவல் -3 படி ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, PE&MT டெஸ்ட், மருத்துவ பரிசோதனை ஆகியவை அடிப்படையில் தேர்வுகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு மையங்களை பொறுத்தவரை தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, வேலூர், புதுவை ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் உள்ளிட்டோருக்கு கட்டணம் இல்லை. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் (https://ssc.gov.in/
) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வரும் 21.10.2025.- கடைசி நாளாகும். விண்ணப்பங்களை திருத்த 29.10.2025-31.10.2025 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கணினி வழியிலான ஆன்லைன் தேர்வு டிசம்பர் 2025/ ஜனவரி 2026 ல் நடைபெறும் என உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_DPCE_2025.pdf
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications