எஸ்பிஐ வங்கியில் 2,600 பணியிடங்கள்.. மாதம் 50 ஆயிரம் சம்பளம்.. டிகிரி முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்
சென்னை: எஸ்பிஐ வங்கியில் 2600 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரு.48,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கான கல்வித்தகுதி விவரங்கள், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொத்த்துறை வங்கியான எஸ்பிஐயில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வங்கி கிளைகளுடன் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அந்த வங்கி உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பி வருகிறது.

இந்த வங்கியில் பணி செய்யும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம், சலுகைகள் என கிடைப்பதால் வங்கிகளில் பணியாற்ற வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு என்றால் மிகையல்ல. இதனால், எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் வெளியிடும் தேர்வு அறிவிப்பை தேர்வர்கள் ஆர்வத்துடன் எதிபார்த்து இருப்பார்கள். இந்த நிலையில்தான் தற்போது எஸ்பிஐ வங்கி சர்க்கிள் அதிகாரி CBO பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
சர்க்கிள் பேஸ்டு ஆஃபிசர் (CBO)-2600
கல்வித் தகுதி:
எஸ்பிஐ - சிபிஓ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனு ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருக்க ஏண்டும். என்ஜினியரிங், மெடிக்கல், காஸ்ட் அக்கவுண்டிங் அல்லது சிஏ முடித்து இருப்பது கூடுதல் தகுதியாகும். அனுபவமும் அவசியம். விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு வணிக வங்கி அல்லது ஊரக வங்கிகளில் பணியற்றிய அனுபவம் இருத்தல் அவசியம். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபம் அவசியம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 30.04.205 அன்று தேதிப்படி 21 வயதினை பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ் சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்க்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480/- சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைனில் எழுத்து தேர்வு நடைபெறும். பின்னர் நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வை பொறுத்தவரை தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, நாகர்கோவில், சேலம், நாமக்கல், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி
https://sbi.co.in/ என்ற ஆன்லைன் இணையதளம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கும் நாள் 9.05.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 29.05.2025 ஆகும்.
விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை பொது பிரிவினர் என்றால் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாகவே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். எஸ் சி எஸ்டி பிரிவினர் என்றால் விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://sbi.co.in/documents/77530/52947104/CBO+advt+final.pdf/b4d458c6-020e-d611-1814-479c5bad24ac?t=1746728206892 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
-
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications