
மாதஊதியம் ரூ.35,000 டூ ரூ.85,000.. சென்னையிலேயே அரசு பணி.. அழைக்கும் தமிழக க்ரீன் க்ளைமேட் கம்பெனி!
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ‛க்ரீன் க்ளைமேட் கம்பெனி' யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி பைனான்ஸ் ஆபிசர், டெக்னிக்கல் ஆபிசர், அட்மின் ஆபிசர், அட்மின் அசோசியேட்ஸ், அட்வைசர் ஆகிய 5 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை பெற முடியும்.
தமிழ்நாடு அரசு சார்பில் புதிதாக 'க்ரீன் க்ளைமேட் கம்பெனி' துவங்கப்பட்டுள்ளது. இதனை 'பசுமை காலநிலை மாற்ற இயக்கம்' என அழைக்கலாம். காலநிலை மாற்றத்தால் ஒவ்வொரு நாடுகளும் பல இடர்பாடுகளை சந்தித்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகள் முயன்று வருகின்றன.
இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. மத்திய அரசு சார்பில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தான் ஒரு மாநில அரசாக தமிழ்நாடு ‛க்ரீன் க்ளைமேட் கம்பெனி'யை துவங்கி உள்ளது. இந்த கம்பெனியில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
கொலைக் களமான கூர்நோக்கு இல்லம்? மூடிமறைத்த அதிகாரிகள்! தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை!

காலியிடம் எவ்வளவு?
தமிழ்நாடு க்ரீன் க்ளைமேட் கம்பெனியில் மொத்தம் 5 பிரிவுகளில் 8 பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி பைனான்ஸ் ஆபிசர், டெக்னிக்கல் ஆபிசர், அட்மின் ஆபிசர், அட்வைசர் ஆகிய பணியிடங்களுக்கு தலா ஒருவரும், அட்மின் அசோசியேட்ஸ் பணிக்கு 4 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளன.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சிஏ, காஸ்ட் அக்கவுண்ட், டாக்டரேட் டிகிரி, டிகிரி, மாஸ்டர் டிகிரி உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். குறிப்பாக பைனான்ஸ் ஆபிசர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சிஏ, காஸ்ட் அக்கவுண்ட், பைனான்ஸ் பிரிவில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும். டெக்னீக்கல் ஆபிசர் பணிக்கு என்விரான்மென்டல் சயின்ஸ் பிரிவில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டம். அட்மின் ஆபிசர் மற்றும் அட்மின் அசோசியேட்ஸ் பணிகளுக்கு டிகிரியும், அட்வைசர் பணிக்கு என்விரான்மென்டல் சயின்ஸ் பிரிவில் டாக்டரேட் படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு தனித்தனியே வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பைனான்ஸ் ஆபிசர் பணிக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். டெக்னீக்கல் ஆபிசர், அட்மின் ஆபிசர், அட்மின் அசோசியேட்ஸ், அட்வைசர் பணிகளுக்கு விதிகள் படி தனித்தனி வயது வரம்பு உள்ளது. அதிகபட்ச வயது என்பது 45 ஆக உள்ளது.

மாத சம்பளம் என்ன?
பைனான்ஸ் ஆபிசர் மற்றும் டெக்னீக்கல் ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.85,000 சம்பளமாக கிடைக்கும். அதேபோல் அட்மின் ஆபிசர் பணிக்கு ரூ.35 ஆயிரம், அட்மின் அசோசியேட்ஸ் பணிக்கு ரூ.30 ஆயிரமும் சம்பளம் வழங்கப்படும். அட்வைசர் பொறுப்புக்கு விதிகளின் படி சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படும்.

கடைசி தேதி என்ன?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் tngreencompany.com அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 2ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 12 மாதங்கள் வரை பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு வருடாந்திர செயல்பாடு அடிப்படையில் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை பணி நீட்டிப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here