Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினின் மாஸ் பிளான்! TAPS பென்சன் திட்டத்தை வகுத்த மூளை.. அரசுக்கும் சுமை இன்றி! ஸ்மார்ட் வியூகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்காக புதிய உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (ஜனவரி 3, 2026) அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி, மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் கடைசி அடிப்படை ஊதியத்தில் 50% உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.

கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான மூவர் ஓய்வூதியக் குழுவின் அறிக்கை அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்குழு, பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை ஆராய்ந்து தமிழ்நாட்டுக்கு ஏற்ற புதிய மாதிரித் திட்டத்தை பரிந்துரைத்திருந்தது.

TAPS திட்டத்தின்கீழ், ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10% ஓய்வூதிய நிதிக்கு செலுத்த வேண்டும். கூடுதல் நிதித் தேவையை மாநில அரசே ஏற்கும். இத்திட்டத்தால், ஓய்வூதிய நிதிக்கு ₹13,000 கோடி கூடுதல் செலவு அரசுக்கு உடனடியாக ஏற்படும்.

TAPS vs OPS vs NPS How does Tamil Nadu CM Stalin new pension scheme is so intelligent

TAPS திட்டத்தின்கீழ் புதிய பென்சன்

பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு உண்டு. ஒரு ஓய்வூதியதாரர் மரணமடைந்தால், அவர் பெற்றுவந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாகப் பரிந்துரைக்கப்பட்ட பயனாளிகளுக்குக் கிடைக்கும். ஓய்வு அல்லது பணி மரணத்தின்போது, சேவை காலத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக ₹25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.

தகுதிச் சேவைக்காலம் நிறைவு செய்யாதவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) சேர்ந்து, TAPS அமலுக்கு முன்னர் ஓய்வூதியம் பெறாமல் ஓய்வு பெற்றவர்களுக்கு 'சிறப்பு கருணை ஓய்வூதியம்' உண்டு. மேலும், ஆண்டுதோறும் சுமார் ₹11,000 கோடி அரசு பங்களிக்க வேண்டும், இது ஊழியர்களின் ஊதியத்தைப் பொறுத்து அதிகரிக்கக்கூடும்.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களான எ.வ. வேலு (பொதுப்பணி), தங்கம் தென்னரசு (நிதி), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளி கல்வி) ஆகியோருடனும், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் த. உதயச்சந்திரன் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார்.

ஸ்டாலின் நடத்திய ஆலோசனை

பின்னர், எக்ஸ் தளத்தில் திரு. ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை TAPS திட்டத்தின் மூலம் திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ளது. நம்பிக்கை வைத்த மக்களுக்கு திமுக அரசு எப்போதும் உண்மையுடன் நிற்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

"TAPS, அரசு ஊழியர்களுக்கான புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசு. திராவிட மாடல் நல்லாட்சி தொடரும். தமிழ்நாட்டின் நிதி நிலை வலுப்பெறும்போது, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான (JACTTO-GEO) ஜாக்டோ-ஜியோவும், பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தன. ஜனவரி 6 முதல் அறிவிக்கப்பட்டிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும் ஜாக்டோ-ஜியோ வாபஸ் பெற்றுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீட்டெடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. அரசு ஊழியர் சங்கங்கள் இக்கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. புதிய TAPS திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியம் மற்றும் பணப் பலன்களை ஊழியர்களுக்கு வழங்குகிறது. மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில், திமுக அரசின் இந்த TAPS அறிவிப்பு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

3 விதமான பென்சன் முறையின் ஒப்பீடு!

பழைய ஓய்வூதியம் (OPS) - திட்டத்தின் அம்சங்கள் என்னென்ன?

  • ஓய்வூதியத் தொகை- கடைசி சம்பளத்தின் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும்
  • ஊழியர் பங்களிப்பு - இல்லை
  • அகவிலைப்படி (DA) - உண்டு
  • பணிக்கொடை (Gratuity) - உண்டு
  • குடும்ப ஓய்வூதியம் - உண்டு
  • பாதுகாப்பு - அரசின் முழுப் பொறுப்பு


புதிய ஓய்வூதியம் (NPS) - திட்டத்தின் அம்சங்கள் என்னென்ன?

  • ஓய்வூதியத் தொகை - முதலீடு மற்றும் சந்தை லாபத்தைப் பொறுத்தது
  • நிரந்தர தொகை - இல்லை
  • ஊழியர் பங்களிப்பு - ஊழியர் 10% கட்டாயம்
  • அகவிலைப்படி (DA) - கிடையாது
  • பணிக்கொடை (Gratuity) - உண்டு
  • குடும்ப ஓய்வூதியம் - கிடையாது
  • பாதுகாப்பு - சந்தை அபாயத்திற்கு உட்பட்டது

தமிழ்நாடு அரசின் TAPS திட்டம் - திட்டத்தின் அம்சங்கள் என்னென்ன?

  • ஓய்வூதியத் தொகை - கடைசி சம்பளத்தின் 50% ஓய்வூதியம்
  • ஊழியர் பங்களிப்பு - ஊழியர் 10% , மீதம் தமிழ்நாடு அரசு ஏற்கும்
  • அகவிலைப்படி (DA) - உண்டு, ஆண்டுக்கு இருமுறை
  • பணிக்கொடை (Gratuity) - உண்டு, ₹25 லட்சம் வரை உயர்வு
  • குடும்ப ஓய்வூதியம் - உண்டு, 60% வரை
  • பாதுகாப்பு - அரசின் முழுப் பொறுப்பு
  • அரசுக்கு சுமை இன்றி ஸ்மார்ட் பிளான்

இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு சுமை இன்றி ஸ்மாட்டாக திட்டமிட்டு உள்ளனர். அதன்படி ஊழியர்களுக்கு 50 சதவிகிதம் பென்சன் கிடைக்கும் . பணிக்கொடை கிடைக்கும், குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும், ஆனால் இதற்கெல்லாம் கட்டுப்பாடு உள்ளது. பணிக்கொடை (Gratuity) - உண்டு, ₹25 லட்சம் வரை உயர்வு, குடும்ப ஓய்வூதியம் - உண்டு, 60% வரை என்று கட்டுப்பாடுகள் உள்ளன.

அதோடு ஊழியர்கள் தங்களது 10 சதவிகித வருமானத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. இப்படி பழைய ஓய்வூதிய பலனோடு கூடுதலாக சில கட்டுப்பாடுகளை கொண்டு விதிக்கப்பட்டு உள்ள இந்த திட்டம் அரசுக்கும் சுமை இன்றி.. ஊழியர்களுக்கும் தேவையான பலன்களை அளிப்பதால் இரண்டு தரப்பிற்கும் சாதகமாக மாறி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+