அனுபவம் வேண்டாம்.. B.sc, BCA படித்தோருக்கு TCS-யில் ஐடி வேலை ரெடி.. ஜனவரி 11 கடைசி நாள்
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் பிசிஏ, பிஎஸ்சி டிகிரி முடித்தவர்களுக்கான பிரத்யேக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பம் செய்ய 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி கடைசி நாளாகும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய அனுபவம் வேண்டாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் TCS B.Sc Ignite & Smart Hiring Batch - 2025 and 2026 என்ற பெயரில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

இந்த பணிக்கு பிசிஏ, பிஎஸ்சி, B.Voc பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பிஎஸ்சி என்றால் ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், டேட்டா சயின்ஸ், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, எலக்ட்ரானிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, பயோ கெமிஸ்ட்ரி உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களும், அதேபோல் B.Voc என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
இவர்கள் அனைவரும் 2025ம் ஆண்டில் படிப்பை முடித்திருப்பவராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் 2026ம் ஆண்டில் மேற்கூறிய படிப்பை முடிப்பவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு அரியர் என்பது இருக்கலாம். ஆனால் பணியில் சேர்வதற்கு முன்பு அதனை கிளியர் செய்யும் வகையில் இருக்க வேண்டும். இந்த பணிக்கு இன்ஜினியரிங் முடித்தவர்களால் பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியாது.
தற்போதைய அறிவிப்பின்படி மேற்கண்ட படிப்பை முடித்திருந்தாலும் கூட TCS BSc Ignite மற்றும் TCS Smart Hiring என்று 2 பிரிவுகளில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யபப்பட உள்ளனர். இதில் TCS BSc Ignite என்பதை பொறுத்தவரை சயின்ஸ் மற்றும் சாப்ட்வேர் புரோகிராம் பயிற்சி வழங்கப்படும். சாப்ட்வேர் இன்ஜினியரிங் பணிக்கான பயிற்சிகள் கூட வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பின்படி Cloud, Blockchain, AR/VR/XR, AI/ML/GenAI, robotics, Digital Engineering உள்ளிட்டவை சொல்லி தரப்படும்.
அதோடு கிராசூவேட் இன்ஜினியரிங் டீமுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி உயர் படிப்புக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். அதாவது இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழங்களில் PG டிகிரி முடிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இவை அனைத்தும் TCS Ignite முறையில் பணியில் சேர விரும்புவோருக்கு கிடைக்கும்.
அதேவேளையில் TCS Smart Hiring முறை என்றால் பணியில் சேர விரும்புவோருக்கு டெக்னோ ஃபங்சனல் ரோல் (Techno Functional Role) பணி வழங்கப்படும். இன்ஜினியரிங், குவாலிட்டி அசூரன்ஸ், டேட்டா அனலிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியமர்த்தப்படுவார்கள். அதுதொடர்பான டெக்னிக்கல் ஸ்கில்ஸ் சார்ந்த பயிற்சி என்பது வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 2026ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதிக்குள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு சென்று விண்ணப்பம் செய்து கொள்ளலாம். பணிக்கான பதிவு TCS Next Step Portal மூலமாக நடக்கும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு தேர்வு இருக்கும். அதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும்.
தேர்வு ஆன்லைனில் நடக்காது. தேர்வு மையங்களில் வைத்து தேர்வு என்பது நடத்தப்படும். தேர்வு என்பது 2 மணிநேரம் இருக்கும். தேர்வுக்கான மாடல் வினாத்தாள் அதிகாரப்பூர்வ அறிப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி தயாராகி இருந்தாலே பணிக்கு தேர்வாகலாம்.
இந்த தேர்வில் Numerical Ability, Verbal Ability, Reasoning Ability, Coding (Optional) அடிப்படையில் கேள்விகள் என்பது இருக்கும். மேலும் இந்த பணியிடங்கள் First Come First Serve முறையில் நிரப்பப்பட உள்ளது. அதாவது ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் முதலில் விண்ணப்பம் செய்வோருக்கு மட்டுமே அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைக்கும். தாமதமாக விண்ணப்பம் செய்யும்போது அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைக்காமல் தூரத்தில் உள்ள தேர்வு மையம் கிடைக்கும் நிலை உருவாகலாம்.
மேலும் தேர்வு மையத்தை ஒருமுறை தேர்வு செய்தால் மாற்றம் செய்ய முடியாது. இதனால் கவனமுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வது தொடர்பான முழுவிபரம் கீழே உள்ள லிங்க் மூலம் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகங்கள் ஏதுவும் இருப்பின் [email protected], Toll free - 18002093111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பம் செய்வதற்கான முழுவிவரம் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதனை பார்த்து படித்து தவறின்றி விண்ணப்பம் செய்யலாம்.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications