Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் ஐடி வேலை ரெடி.. TCS சார்பில் நவம்பர் 15ல் இண்டர்வியூ.. யாருக்கெல்லாம் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ நவம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது ஜாவா ஸ்பிரிங்புட் மற்றும் மைக்ரேசார்வீசஸ் + ஏடபிள்யூஎஸ் (Java Springboot & Microservices +AWS) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

it jobs job tcs

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா/ஜே2இஇ பேஸ்டு அப்ளிகேஷன் டெவலப்மென்ட், இம்ளிமென்டேஷன், டிரபிள்சூட்டிங் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். ஸ்பிரிங் பிரேம்வொர்க், REST, API, டிசைன், பேட்டர்ன்ஸ், ஈவன்ட் டிரைவன் டிசைன் பிரின்சிபிள் மற்றும் டேட்டாபேஸ் குவாரிஸ் தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் Spark framework பயன்படுத்தி அப்ளிகேஷன் மெயின்டெயின் செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஃப்ரண்ட்எண்ட் மற்றும் பேக்எண்ட் டெக்னாலஜிகளான ஏபிஐ, இன்டர்பேசஸ், ரைட் சர்வர் சைட் கோட் மற்றும் இன்டிகிரேட் வேரியஸ் காம்போனென்ட்ஸ் உள்ளிட்டவை பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும்.

Spark ecosystem-மில் Spark SQL, DataFrames, Datasets, Streming on AWS Ecosystem உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக விண்ணப்பத்தாரர்கள் 6-10 ஆண்டு ஐடி துறையில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 15 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு அவர்களுக்கான இண்டர்வியூ இடம், நேரம் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+