வாரம் 5 நாள் மட்டுமே வேலை.. பி.காம், பைனான்ஸ் முடித்தோருக்கு சான்ஸ்.. அழைக்கும் சென்னை ஐடி நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மஹிந்திரா குரூப்பை சேர்ந்த டெக் மஹிந்திரா சார்பில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள நிறுவனத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும். 2 நாட்கள் விடுமுறையாகும். மேலும் பணியாளர்களுக்கு ‛கேப்’ வசதியும் உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இந்தியாவில் உள்ள பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்று டெக் மஹிந்திரா (Tech Mahindra). மஹிந்திரா குரூப்பை சேர்ந்த இந்த நிறுவனம் மகாராஷ்டிராவில் புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை சோழிங்கநல்லூரியில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

it jobs job jobs


இந்நிலையில் தான் சென்னையில் உள்ள டெக் மஹிந்திரா நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது கான்ட்ராக்ட் அசூரன்ஸ் (Contract Assurance) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பைனான்ஸ் பிரிவில் டிகிரி அல்லது பிகாம் படிப்பை முடித்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் நன்றாக இருக்க வேண்டும். மேலும் கான்ட்ராக்ட் அசூரன்ஸ் (Contract Assurance) பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். எம்எஸ் எக்ஸல்லில் நல்ல திறமை கொண்டிருக்க வேண்டும். மேலும் சேல்ஸ்ஃபோர்ஸ் அப்ளிகேஷனில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ZOHO-வின் அடுத்த வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21ம் தேதி கடைசி நாள்! சென்னையிலேயே பணி


மேலும் பில்லிங், பி மற்றுமு் எல்-ல் காஸ்ட் மற்றும் மார்ஜிங் பற்றி தெரிந்திருக்க வேண்டும். எக்ஸல் ரிப்போர்ட், டேட்டா மேப்பிங் டேட்டா பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும். அக்கவுண்ட்டிங், ப்ராபிட் மற்றும் இழப்பு (Profit and loss), P & L analysis, காஸ்ட் மற்றும் ரெவன்யூ பற்றிய புரிதல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணியாகும். 2 நாட்கள் விடுமுறையாகும். இருப்பினும் தேவை என்றால் வார இறுதி நாட்களில் பணியாற்ற வேண்டி இருக்கும். இதுதவிர 24X7 என்ற முறையில் விண்ணப்பத்தாரர்கள் வேலை செய்ய வேண்டி இருக்க வேண்டும். மேலும் நிறுவனத்தில் ‛கேப்’ வசதி உள்ளது. வீட்டில் இருந்து ‛கேப்’ மூலம் பணிக்கு பணியாளர்கள் சென்று வரலாம்.

அனுபவம் வேண்டாம் + ரூ.5 லட்சம் வரை சம்பளம்.. பிரபல ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு

\
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை. கம்பெனி ஸ்டேன்டர்ட் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் என்பது டெக் மஹிந்திரா நிறுவனத்தில் விதி மற்றும் விண்ணப்பத்தாரர்களின் பணி அனுபவம், திறமையை பொறுத்து மட்டுமே நிர்ணயம் செய்யப்படும். இந்த சம்பளம் என்பது ஒவ்வொவருக்கும் வித்தியாசமாக கூட இருக்கலாம்.

இந்த பணிக்கான அறிவிப்பு வெளியாகி ஒரு வாரமாகிவிட்டது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி நிறைவு பெறலாம். இதனால் இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+