தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.. தென்காசி கோயிலில் மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை!
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கோயில்களில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில், 'பாரா' (காவலர்) பதவி பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பணியிட விவரம்:
ஒரே ஒரு காவலர் பணியிடம் நிரப்பப்படுகிறது. இது நிரந்தர அரசுப் பணியாகும். தேர்வு செய்யப்படும் நபர் திருக்கோயிலின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கைப் பராமரிக்கும் பணி வழங்கப்படும். இந்த பணிக்கு விருப்பமும், அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்தால் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கோயிலில் பணியாற்ற விருப்பம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பைப் பொறுத்தவரை விண்ணப்பதார்கள் ஜூலை 1, 2025 அன்று 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
'பாரா' காவலர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு லெவல் - 17 இன் கீழ் மாதந்தோறும் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அறநிலையத்துறை அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபால் வழியாகவோ நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
விண்ணப்பப் படிவங்களை ஜனவரி 15, 2026 முதல் ஜனவரி 30, 2026 வரை, திருக்கோயில் அலுவலக வேலை நேரங்களில் நேரடியாகப் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும், தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து, ஜனவரி 30, 2026 அன்று மாலை 05:45 மணிக்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும். இணையவழியாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பிக்கும் முன், சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை விண்ணப்பதாரர்கள் முழுமையாகப் படித்து, தகுதியை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். தேர்வு முடிவுகள் வெளியாகும் காலம் வரை செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரியையும், அலைபேசி எண்ணையும் பராமரிப்பது கட்டாயமாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://hrce.tn.gov.in/












Click it and Unblock the Notifications