திருச்சியில் அரசு வேலை.. 228 சமையலா், துப்புரவாளா் பணியிடங்கள்.. ரூ 50,000 வரை சம்பளம்!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் அரசு விடுதிகளில் காலியாகவுள்ள 228 சமையலா், துப்புரவாளா் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடா்பாக திருச்சி மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு வெளியிட்டுள்ள அறிவிப்பில். "திருச்சி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடா் நல விடுதிகள், பழங்குடியினா் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள 135 சமையலா் பணியிடத்துக்கு ரூ.15700 - 50000 என்ற ஊதிய பிணைப்பில் நியமிக்கப்பட உள்ளார்கள்.

மேலும் முழு நேரத் துப்புரவாளா் பணியிடங்களில் 13 போ் ரூ. 7,700-24,200 என்ற சிறப்பு காலமுறை ஊதிய பிணைப்பில் நியமிக்கப்பட உள்ளார்கள். அத்துடன் பகுதிநேர துப்புரவாளா் பணியிடத்தில் 80 பேரும் நியமிக்கப்பட உள்ளனர். இவா்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரா் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலா் பணிக்கு அனுபவமுள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 18 முதல் 35 வயது வரை உள்ளவா்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் திருச்சி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருத்தல்வேண்டும்.
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமோ மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்துக்கு அக்டோபர் 19-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்" இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications