For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாடு மின்வாரியத்தில் ஏராளமான காலி பணியிடங்கள்.. வருகிறது புதிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர், கணக்கீட்டாளர் ஆகிய பணியிடங்களுக்கு புதிதாக அறிவிப்பு வெளியிட்டு தகுதியான நபர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக மின்வாரியத்தில் கள உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன.

இந்நிலையில் 1,300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர், 600 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தவர்களை தேர்வு செய்ய, 2020-ம் ஆண்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் கொரோனா தொற்று பரவியதால் தேர்வு நடத்தப்படவில்லை.

மின் இணைப்பு வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த கருவி கட்டாயம் இருக்க வேண்டும்.. மின்சார வாரியம் அதிரடிமின் இணைப்பு வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த கருவி கட்டாயம் இருக்க வேண்டும்.. மின்சார வாரியம் அதிரடி

2900 பணியிடங்கள்

2900 பணியிடங்கள்


இதற்கிடையே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் 2,900 கள உதவியாளர் பணியிடத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக, அறிவிப்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, தேர்வு நடத்தப்படவில்லை.

அரசு திட்டம்

அரசு திட்டம்

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், பழைய அறிவிப்புகளை ரத்து செய்துவிட்டு, புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, பணியாளர்களை தேர்வு செய்ய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

முக்கியமான பணி

முக்கியமான பணி

இதனிடையே மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிக்குத் தேர்வெழுதியவர்களில் அதிக மதிப்பெண் பெற்றும் ஏறக்குறைய 5,000 பேருக்குப் பணி ஆணை இன்னும் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தள்ளது. மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிதான் முக்கியப் பணியாகும். மின் இணைப்புக் கேட்பவர்களுக்கு நேரில் சென்று இணைப்பைக் கொடுப்பது, மின்கம்பம் நடுவது, மின்கம்பம் ஏறுவது, மரம் வெட்டுவது, லைன் இழுத்துக்கொடுப்பதுபோன்ற பணிகளை செய்வார்கள்.

பணி வழங்கவில்லை

பணி வழங்கவில்லை

இவர்கள்தான் சென்னை போன்ற பெருநகரங்களில் பூமிக்கடியில் மின்சார வயர்கள் செல்வது, மின்பணிக்காகப் பள்ளம் தோண்டுவது, மின்வெட்டு பிரச்னை சரிசெய்யப்பட்ட பிறகு தோண்டிய பள்ளத்தை மூடுவது, ட்ரான்ஸ்ஃபார்மர்களைப் பழுதுபார்ப்பது எனப் பலவகையான பணிகளை கேங்மேன் வேலையாட்கள்தான் செய்யவார்கள். இந்த பணிக்கு தேர்வு எழுதி அதிகமதிப்பெண் பெற்ற சுமார் 5,000 பேருக்கு இன்னும் பணிவழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது தேர்வானவர்களில் 60 சதவீதம் பேருக்கு பணி வழங்கப்பட்டு 40 சதவீதம் பேருக்கு இன்னமும் பணி வழங்கப்படவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் போராடி வருகிறார்கள். ஆட்சி மாற்றம் நடந்துள்ளதால் தங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

English summary
Tamil Nadu Generation and Distribution Corporation Limited has released the TNEB TANGEDCO Recruitment 2021 : eb department likely announced new vacancies for Assistant Engineer and Accountant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X