நோ எக்ஸாம்.. இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது?
ஈரோடு: இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சோழிஸ்வரர் திருக்கோயிலில் அர்ச்சகர், டிக்கெட் விற்பனையாளர், இரவு காவலர், திருவலகு போன்ற பணிகளுக்கு தகுதியானவர்கள் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பலருக்கும் அரசு வேலையில் சேர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.அவர்கள் விடா முயற்சியுடன் சரியான வாய்ப்பு வரும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு வேலைகளில் பல்வேறு விதம் இருக்கின்றன. இந்து அறநிலையத்துறையும் அரசு துறை தான். அதிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சோழிஸ்வரர் திருக்கோயிலில் அர்ச்சகர், டிக்கெட் விற்பனையாளர், இரவு காவலர், திருவலகு போன்ற பணிகளுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்த பணியிடங்கள்: நான்கு
பணியின் பெயர் : அர்ச்சகர் - 1
பணியின் பெயர்: டிக்கெட் விற்பனையாளர் - 1
பணி: இரவு காவலர்- 1
பணி: திருவலகு- 1
எந்த பதவிக்கு என்ன தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்: அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 1 ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் நன்றாக பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். டிக்கெட் விற்பனையாளர் பணிக்கு பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர பணிகளுக்கு தமிழில் பேச, எழுத தெரிந்திருப்பது கட்டாயம் ஆகும்
கல்வி வயது: 1.7.2023 தேதியின் படி18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு சோழிஸ்வரர் திருக்கோயில், காவிரி கரைபாளையம் ஈரோடு-635 001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசிதேதி: 30.6.2023 ஆகும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications