கடைசி வாய்ப்பு.. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று மாலை வரை தான் டைம்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
சென்னை: பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று மாலைக்குள் ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் மையத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு நடத்துவது வழக்கம். காலியிடங்கள் தேவைகளை பொறுத்து இந்த பணியிட மாறுதல்கள் இருக்கும். அந்த வகையில் 2024-25ஆம் கல்வியாண்டில் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது கடந்த மே 13ஆம் தேதி தொடங்கியது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் ஆசிரியர்கள், தங்களது எமிஸ் - ஐடி மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்து பள்ளி கல்வி துறை. இதன்படி சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அரசு பள்ளி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் 3000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றுள்ளார்கள். தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை ஒன்றியம், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்டத்திற்குள்ளான பணியிட மாறுதல் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பிருந்து பள்ளிக்கல்வித்துறையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இன்று ( ஜூலை 11 ) முதல், ஜூலை 20 வரை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜூலை 31 வரை ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திட பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்திருக்கிறது. எனவே, 2024-25-ம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்காத இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் மையத்துக்கு (எமிஸ்) இன்று (வியாழக்கிழமை) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்தவர்களுக்கு ஆகஸ்டு 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை ஒன்றியத்துக்குள், கல்வி, வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் என பிரித்து அந்தந்த குறிப்பிட்ட நாட்களில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது,
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications