For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலைக்காக ஐக்கிய அரபு அமீரகம் போறீங்களா - தடுப்பூசி, கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம்

வேலை வாய்ப்பு விசா வைத்துள்ளவர்கள் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

திருச்சி: இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்ல அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரக வேலை வேலை வாய்ப்பு விசா வைத்துள்ளவர்கள் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டிற்குக் செல்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் அனுமதித்துள்ள கொரோனா தடுப்பூசிகளான பைஜர், ஸ்புட்னிக், ஆஸ்ட்ராஜெனகா, சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை இரண்டு தவணை செலுத்தி இருக்க வேண்டும் எனவும் QR வசதியுடன் கூடிய 48 மணி நேரத்திற்குட்பட்ட நெகடிவ் கொரோனா சான்றிதழ் வைத்திருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், சார்ஜா உள்ளிட்ட நகரங்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து யாரும் இந்த விமானங்களில் பயணிக்க முடியாது.

UAE permits Indians for Work - Vaccine, Corona Negative Certificate Mandatory

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மட்டுமே இந்தியர்கள் இங்கு வர முடியும். இதனால் இந்தியாவில் இருந்து பலதரப்பட்ட மக்கள் தங்கள் பணி நிமித்தமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று முதல் பல்வேறு நிபந்தனைகளுடன் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்ல அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரக வேலை வாய்ப்பு விசா வைத்துள்ளோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.

குறிப்பாக அவர்கள், ஐக்கிய அரபு அமீரகம் அனுமதித்துள்ள கொரோனா தடுப்பூசிகளான பைஜர், ஸ்புட்னிக், ஆஸ்ட்ராஜெனகா, சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை இரண்டு தவணை செலுத்தி இருக்க வேண்டும். மேலும் QR வசதியுடன் கூடிய 48 மணி நேரத்திற்குட்பட்ட எதிர்மறை (நெகடிவ்) கொரோனா சான்றிதழ் வைத்திருக்கவேண்டும்.

அத்துடன் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (அதாவது துபாய் / ஷார்ஜா / அபுதாபி / ராஸ்-அல்-ஹைமாஹ் / அல்-அய்ன்) புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட நெகடிவ் ரேபிட் டெஸ்ட் சான்றிதழ் வைத்திருக்க இருக்க வேண்டும்.

2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செப்டம்பர் முதல் கோவேக்சின் தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செப்டம்பர் முதல் கோவேக்சின் தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு

மேலும் ஐக்கிய அரபு அமீரக விமானநிலையங்களை அடைந்தவுடன் அங்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும். அந்த சோதனை முடிவு அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் தெரிந்துவிடும். அதுவரை பயணி தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த சுற்றறிக்கை பன்னாட்டு விமான நிலையங்களான சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து திருச்சி விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

English summary
The government of that country has given permission to go to UAE from India. Accordingly, UAE employment visa holders are allowed to travel from India to the UAE with various restrictions. Visitors to the country are required to pay two installments of one of the coronavirus vaccines approved by the United Arab Emirates, such as Pfizer, Sputnik, Astrogenica, and Sinoform, and have a negative corona certificate within 48 hours with QR facility.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X