பொதுத்துறை வங்கியில் வேலை.. 536 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!
சென்னை: நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 536 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு என்ன என்பன போன்ற விவரங்களை இங்கு காணலாம்.
நாட்டில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று யூகோ வங்கி. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யூகோ வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. பொதுத்துறை வங்கி என்பதால் இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவைகள் கிடைக்கின்றன.

யூகோ வங்கியில் காலிப்பணியிடங்கள் பெரும்பாலானவை ஐபிபிஎஸ் நடத்தும் வங்கிகளுக்கான தேர்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன. அதுபோக அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களும் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் தற்போது 532 அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* தமிழ்நாடு - 21
* ஆந்திரப் பிரதேசம் - 07
* அருணாச்சலப் பிரதேசம் - 01
* அசாம் - 24
* பீகார் - 35
* சண்டிகர் - 04
* சத்தீஸ்கர் - 10
* கோவா - 01
* குஜராத் - 19
* ஹரியானா - 14
* இமாச்சலப் பிரதேசம் - 25
* ஜம்மு காஷ்மீர் - 03
* ஜார்க்கண்ட் - 12
* கர்நாடகா - 12
* கேரளா - 10
* மத்தியப் பிரதேசம் - 27
* மகாராஷ்டிரா - 33
* மணிப்பூர் - 02
* மேகாலயா - 01
* நாகாலாந்து - 01
* டெல்லி - 12
* ஒடிசா - 42
* பாண்டிச்சேரி - 01
* பஞ்சாப் - 24
* ராஜஸ்தான் - 37
* சிக்கிம் - 01
* தெலுங்கானா - 08
* திரிபுரா - 05
* உத்தர பிரதேசம் - 46
* உத்தரகாண்ட் - 08
* மேற்கு வங்கம் - 86 என மொத்தம் 536 பயிற்சி பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 01.04.2021 க்கு பிறகு டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பை பொறுத்தவரை 01.10.2025 தேதிப்படி குறைந்தபட்சம் 20 வயதும் அதிகபட்சம் 28 வயதும் வரையும் இருக்கலாம். அதாவது, 02.10.1997 முன்பாகவோ, 01.10.2005 பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது. அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும்.
தேர்வு முறை & சம்பளம்
ஆன்லைன் நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான அப்ரெண்டீஸ் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ 15,000-வழங்கப்படும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.uco.bank.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப பதிவு 21.10.2025 தொடங்கியது. விண்ணப்பிக்க வரும் 30.10.2025 கடைசி நாளாகும். விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து உறுதி செய்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications