எதிர்பார்க்கவே இல்லையே.. பல லட்சம் இளைஞர்களுக்கு.. ஸ்வீட் சர்ப்ரைஸ் தந்த உதயநிதி.. தூள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இனிப்பான செய்தி ஒன்றை வழங்கினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நேற்று (22.07.2023) சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பணி வாய்ப்பு பெற்ற 1 இலட்சத்து 50 ஆயிரமாவது இளைஞருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.

Udhayanidhi Stalins sweet surprise to so many youngsters in Tamil Nadu interms of Jobs

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 100 வேலைவாய்ப்பு முகாம்கள் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று (22.07.2023) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் முதலாவது வேலைவாய்ப்பு முகாம் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் நடைபெற்றது. அரங்குகளையும், திரு. உதயநிதி ஸ்டாலின் வேலைவாய்ப்பிற்கான வேலைவாய்ப்பு அவர்கள் நேர்காணல் மற்றும் செயல்பாடுகளை விளக்கும் காட்சிக்கூடத்தையும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு பார்வையிட்டார்.

மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற
பயிற்சித்துறையின் இம்முகாமில் India Cements, Zebronics, Hyundai Motors, Tata
உள்ளிட்ட 225 தனியார்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். பல்லாயிரக்கணக்கான வேலைநாடுநர்கள் இம்முகாமில் பங்கேற்றதில் 4273 வேலைநாடுநர்கள் பதிவு செய்து பல்வேறு நிறுவனங்களில் நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 576 (ஆண் - 376 இதில் 11 பெண் -200) வேலைநாடுநர்கள் பணிநியமனம் பெற்றனர்.

இது தவிர்த்து இம்முகாமில் முதல்கட்ட நேர்முகத்தேர்வில் 1315 (ஆண் - 814 பெண் -501 ) நபர்கள் தேர்ச்சிபெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதிப்பெற்றனர். கூடுதலாக பல்லாயிரக்கனக்கான இறுதி ஆண்டு பயிலும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு நேர்முகத் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், வேலைவாய்ப்பு பங்கேற்கும் அனுபவம் குறித்தும் தெரிந்து கொண்டனர்.

முகாம்களில் இதுவரை 07.05.2021 முதல் 21.07.2023 வரை வேலைவாய்ப்பு வாயிலாக 101 பெரிய அளவிலான தனியார் துறை துறையின் வேலைவாய்ப்பு முகாம்களும் 1,258 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. இம்முகாம்கள் வாயிலாக 2,377 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 1,49,982 வேலைநாடுநர்கள் பணிநியமன ஆணைகள் பெற்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற முகாமில் பணிவாய்ப்பு பெற்ற ஒரு இலட்சத்து ஐம்பதாவது வேலைநாடுநர் உள்ளிட்ட வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணையினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தனது பொற்கரங்களால் வழங்கி விழா பேருரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்ரமணியன்,
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் .சி.வெ.கணேசன் , மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர். தாயாநிதி மாறன் , பெருநகர சென்னை மாநகராட்சி மேயர். பிரியா ராஜன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர். மு.மகேஸ்குமார், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும், அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. முகமது நசிமுத்தின், இ.ஆ.ப.,, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் திரு.கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப.,, சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. மு. அருணா, இ.ஆ.ப., மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+