Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிகிரி முடித்தவரா நீங்கள்? மாத சம்பளம் ரூ.48,000 டூ ரூ.89,000 .. யூனியன் வங்கியின் சூப்பர் வேலை!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு பொதுத்துறையின் கீழ் நாட்டின் பல இடங்களில் யூனியன் வங்கி இயங்கி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் செயல்பட்டு வரும் வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கியில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் முதல் சார்டர்ட் அக்கவுண்ட் முடித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்த பட்சமாக ரூ.48 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.89 ஆயிரம் வரை வரை வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக யூனியன் வங்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையை தலைமையிடமாக கொண்டு இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நாட்டின் பல இடங்களில் கிளைகள் உள்ளன.

இந்நிலையில் தான் யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

யூனியன் வங்கியில் சீப் மேனேஜர் (சார்டர்ட் அக்கவுண்ட்) (Charted Accountant) மற்றும் சீனியர் மேனேஜர் கிரெடிட் ஆபிசர் (Credit Officer III) மேனேஜர் கிரெடிட் ஆபிசர் (Credit Officer II)பிரிவுகளில் மொத்தம் 42 பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சார்டர்ட் அக்கவுண்ட் பணிக்கு 3 பேர், கிரெடிட் ஆபிசர் (ஸ்கேல் III) பணிக்கு 34 பேர், கிரெடிட் ஆபிசர் (ஸ்கேல் II) பணிக்கு 5 பேர் என மொத்தம் 42 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

சார்டர்ட் அக்கவுண்டன்ட் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் சிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். மாறாக கிரெடிட் ஆபிசர் பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோரின் குறைந்தபட்ச வயது என்பது 22 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது என்பது 40 ஆக உள்ளது. வயது வரம்பு என்பது 01.01.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளியினருக்கு 10 வயது வரையும் தளர்வு உண்டு.

 மாத சம்பளம் எவ்வளவு?

மாத சம்பளம் எவ்வளவு?

சார்டர்ட் அக்கவுண்டன்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.76,010 முதல் அதிகபட்சமாக ரூ89,890 வரை சம்பளம் வழங்கப்படும். கிரெடிட் ஆபிசர் (ஸ்கேல் III) பணியை பெறுவோர் மாதம் ரூ.63,840 முதல் ரூ.78,230 வரையும், பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவிகிரெடிட் ஆபிசர் (ஸ்கேல் II) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.48,170 முதல் ரூ.69,810 வரை சம்பளம் வழங்கப்படும்.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 12ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் எழுத்து தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.850 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது ரூ.150 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பணி தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+