For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யுனைட்டெட் இந்தியாவில் 684 காலிப் பணியிடங்கள்: 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையைச் சேர்ந்த யுனைட்டெட் இந்தியா இன்ஸூயூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 684 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

United India Insurance Recruitment 2014 Apply Online - 684 Assistants

உதவியாளர் பணியிடங்கள்:

வயது வரம்பு: விண்ணப்பதாரருக்கு 30/06/2014 இன் படி 18 முதல் 28 வயது வரையில் இருக்கலாம்.

சம்பள விகிதம்: 17,000/-

காலிப்பணியிடங்கள்:

இப்பணிகளுக்கு தமிழ்நாட்டினைப் பொறுத்த 105 காலிப்பணியிடங்கள் உள்ளன மற்ற மாநிலங்களில் மீதமுள்ள இடங்கள் நிரப்பப்படும்.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதெனும் ஒரு பட்டப்படிப்பினை முடித்திருக்க வேண்டும் அல்லது மெட்ரிகுலேஷனின் பிளஸ் 2 அல்லது அதற்கு நிகரான படிப்பினை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். (முன்னாள் ராணுவ வீரர்கள்/ எஸ்/எஸ்.டி - 50%)

மொழி: பணிபுரியப் போகும் மாநிலத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம்

தேர்ந்தெடுக்கும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, கணினி பற்றிய தகுதித்தேர்வு

ஆன்லைன் தேர்வின் கால அளவு: அப்ஜெக்டிவ் முறை - 120 நிமிடங்கள்

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி/எஸ்டி ரூ.75, இதர பிரிவினர் ரூ.450. ஆன்லைன் மூலமாகவே கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடையவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்யலாம்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க கடைசி தேதி - 02/12/2014

விண்ணப்ப நகலுக்கான கடைசி தேதி - 17/12/2014

ஆன்லைன் விண்ணப்ப கட்டணம் செலுத்த - 18/11/2014 முதல் 02/12/2014 வரையில்

மேலும், இதுகுறித்த விவரங்கள் மற்றும் மற்ற வேலைவாய்ப்புகள் பற்றி அறிய http://jobs.oneindia.com/search/ என்ற இணையதள முகவரியில் பார்வையிடவும்.

English summary
United India Insurance Company Limited (UIIC) Chennai is looking for Young and Dynamic Indian Citizens for recruitment Assistants for its Offices all over India. The last date for submission of online registration is 2nd December 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X