ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி ஆவதுதான் லட்சியமா? 979 பணியிடங்கள்! நாளைதான் கடைசி நாள்..விட்றாதீங்க
சென்னை: கடந்த மாதம் குடிமைப் பணி தேர்வான ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 979 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாளாகும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
இந்திய ஆட்சிப்பணியில் அதாவது ஐஏஎஸ், ஐபிஸ் போன்ற பணிகளில் சேர வேண்டும் என்பது பல லட்சம் இளைஞர்களின் கனவாக உள்ளது. பள்ளி பருவ காலத்தில் இருந்தே பலரும் தங்கள் லட்சியம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி ஆவதுதான் என்று சொல்வதை பார்த்து இருக்க முடியும். ஐஏஎஸ் என்றால் மாவட்ட ஆட்சியர் போன்ற உயரிய பொறுப்புக்கு செல்ல முடியும். ஐபிஎஸ் என்றால் காவல்துறையில் நேரடியாக அதிகாரி ஆக முடியும்.

கை நிறைய சம்பளம் மற்றும் அதிகாரமிக்க பொறுப்பு என்பதால் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ.எப்.எஸ் போன்ற குடிமை பணி தேர்வுகளில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் யுபிஎஸ்சி வெளியிடும் தேர்வு அறிவிப்பினை ஆர்வமுடன் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், 979 பணியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
கல்வித் தகுதி:
ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், ஐ.எப்.எஸ், குரூப்-ஏ, குரூப்-பி என மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உயர்ந்த துறைகளில் உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 979 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
21 வயது பூர்த்தியானவர்களும் 32 வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்னப்பிக்கலாம். அதாவது, ஆகஸ்ட் 2, 1993 க்கு முன்பாகவோ அல்லது 2004-க்கு பிறகு பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது. அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்டி வகுப்பை சேர்ந்தவர்கள் என்றால் 37 வயது வரையிலும், ஓபிசி பிரிவினர் என்றால் 35 வயது வரையும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளி என்றால் 42 வயது வரையும், எஸ்.சி /எஸ்.டி வகுப்பை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் என்றால் 47 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
முதன்மை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதன்மை தேர்வில் பெறும் மதிப்பெண்களை பொறுத்து மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். முதன்மை தேர்வை பொறுத்தவரை நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது.
தேர்வு நடைபெறும் இடங்கள்:
தமிழ்நாட்டில் சென்னை,கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும். மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளைதான் 18.02.2025 கடைசி நாளாகும். எனவே ஆர்வமும் தேவையான கல்வி தகுதியும் இருந்து இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றால் மறக்காமல் உடனே அப்ளை பண்ணுங்க
தேர்வு கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ.100- செலுத்தவேண்டும். பெண்கள்/எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு நடைபெறும் நாள் 25.05.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://upsc.gov.in/sites/default/files/Notif-CSP-2025-Engl-220125.pdf


Click it and Unblock the Notifications
