குழந்தை நீதி கதைகள்: கடைசில எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல.. ஹேமலின் நகரத்து பைபர்!
சென்னை: Kids story in Tamil: ஹாய் மக்களே! விசித்திர கதைகள் படிக்க உங்கள எத்தனை பேருக்கு பிடிக்கும். ஒவ்வொரு வாரமும் எதாவது மாயாஜாலம் நிறைந்த கதைகள் படிக்கிறோம் இல்லையா. இந்த வாரம் என்ன கதையா இருக்கும்னு யாருக்காவது ஐடியா இருக்கா.. சரி படிச்சே தெரிஞ்சிக்கலாம் . வாங்க கதைக்கு.
ஒருகாலத்துல ஜெர்மன் நாட்டில் ஹாம்லின் அப்படினு ஒரு நகரம் இருந்தது. இப்பவும் அப்படி ஒரு நகரம் இருக்கு. நீங்க படிக்கப்போற கதையை இப்போவும் அங்க ஒவ்வொரு வாரமும் தெருக்களில் நாடகமா நடிச்சு காட்றாங்களாம். அட கதையை சொல்ல மறந்துட்டேன். இந்த நகரத்தோட பழமையான காலம் அது. அங்க ஒரு மேயர் இருந்தார். அவரோட ஆட்சியில் அந்த நகரம் நன்றாக செழிப்பாக இருந்தது. திடீரென்று ஒருநாள் அந்த நகரத்துல நிறைய எலிகள் புகுந்துவிட்டன. எங்க பாத்தாலும் எலி. நடக்குற இடம் , கடைகள், வீடு என ஒரு இடம் விட்டு வைக்கல அந்த எலிகள். நம்ம வீட்ல ரெண்டு எலி கண்ணில பட்டாலே தொல்லை தாங்க முடியாது. வைக்கிற பொருள்களை எல்லாம் நாசம் பண்ண ஆரம்பிச்சிடும். இந்த நகரத்துல ரெண்டு இல்ல திரும்புற திசையெல்லாம் எலிகள்.

மக்கள் எல்லோருக்கும் ரொம்ப கவலையாக இருந்தது. என்ன பண்றதுனே தெரில, அடிச்சி ,துரத்தி பாத்தாங்க . பூனையை வளத்து பாத்தாங்க. ஒன்னும் வேலைக்கு ஆகல . சரி இதுக்குமேல இந்த எலிகளை ஒன்னும் பண்ண முடியாதுனு முடிவு பண்ணி மேயர் கிட்ட நகரவாசிகள் கிளம்பினாங்க. கூடமா எல்லோரும் நின்னு மேயர கூப்பிட ஆரம்பிச்சாங்க. இவங்க எதுக்கு வந்துருக்காங்கனு மேயருக்கு தெரியும். மக்களை அமைதி படுத்தனும் இல்லையா.
மேயர்" யாரும் பயப்படாதீங்க , கண்டிப்பா இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் அது வர பொறுமையா இருங்க" என்று சொன்னார். மக்கள் " இதுக்குமேல முடியாது மேயர் அவர்களே , குழந்தைக்கு வைக்கிற சாப்பாட கூட விட்டு வைக்க மாட்டேங்குது இந்த எலிகள். நம்ம அசந்து தூங்கின நம்மள கடிச்சி தின்னுவிடுமோனு பயமா இருக்கு " என்றனர். "பெரிய நகரத்தில இருந்து இன்னும் பூனைகளை கொண்டு வர சொல்லிற்கேன் , நீங்க அமைதியா போங்க " என்றார் மேயர். மக்களும் புலம்பிக்கொண்டே கலைந்து சென்றனர்.
நகரத்தில் திடீரென ஒரு இசை மக்களின் காதுகளில் ஒலித்தது. மக்களும் வெளியில் வந்து பார்த்தார்கள். ஒருவன் புல்லாங்குழலை வைத்து இசைத்து கொண்டே நடந்தான். அவன் பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தான். அவன் மேயர் மாளிகைக்கு நடந்தான். காவலாளி இடை மறித்தான்," நில் எங்கு செல்கிறாய்" என்றான். அந்த விசித்திர மனிதனோ இசைப்பதை நிறுத்திவிட்டு, மேயரை பார்க்க வந்துளேன் என்றான். காவலாளி ," அப்படியெல்லாம் உன்னை உள்ளே அனுப்ப முடியாது, உன்னை பார்த்தால் விசித்திரமாக இருக்கிறாய், உன் தோற்றம் ஒரு கிருக்கனை போல் உள்ளது" என்றான். விசித்திர மனிதன் சொன்னான், தோற்றத்தை வைத்து எடை போட்டால் உங்கள் பிரச்சினை முடிவுக்கு வராது, என்றான். என்ன உளறுகிறாய் என்றான் காவலாளி. ஆமாம் , உங்கள் நகரில் இருக்கும் எலிகளை விரட்டவே நான் வந்தேன் என்றான் விசித்திர மனிதன். மேயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் தீவிரமாக இறங்கினர்.
காவலாளி உடனடியாக அவனை மேயரை பார்க்க அனுப்பினான். மேயரை கண்டதும் , " நான் எலிகளை விரட்டுகிறேன் ஆனால் எனக்கு 1000 பொற்காசுகள் வேண்டும் என கேட்டான். மேயர் அதிர்ந்தார். என்ன இந்த சாதாரண எலிகளை விரட்ட 1000 பொற்காசுகளா , முடியாது என்றார் மேயர். அப்படியென்றால் நீங்களே விரட்டி கொள்ளுங்கள் நான் கிளம்புகிறேன், என்றான் விசித்திர மனிதன். மேயருக்கு வேறு வழியில்லை. சரி என்று ஒப்பு கொண்டார்.
விசித்திர மனிதன் கையில் இருந்த புல்லாங்குழலை எடுத்து வாசித்து கொண்டே தெருக்களில் நடக்க ஆரம்பித்தான். அவனது இசை அத்தனை இனிமையாக இருந்தது . எலிகள் ஒவ்வொன்றாக அந்த இசையில் மயங்கி அவன் பின்னே நடக்க ஆரம்பித்தன. அவன் அவற்றை பின்னாடி வரும்படியாக இசைத்து கொண்டே நகரத்தின் எல்லையில் இருக்கும் நதிக்கு சென்றான். நதியில் அத்தனை எலிகளும் குதிக்க ஆரம்பித்தன. நகரமும் சுத்தமானது. மறுநாள் சூரியன் வரும்போது நகரமே பிரகாசமாக இருந்தது.
விசித்திர மனிதன் மேயரை பார்க்க வந்தான். பொற்காசுகளை கேட்டதும் மேயர் 1000 பொற்காசுகள் தர முடியாது வேண்டுமென்றால் 100 பொற்காசுகள் தருகிறேன் என்றார். விசித்திர மனிதன் கூறியபடி வேண்டும் , வாக்குறுதியை மாற்றுவது மேயர் பொறுப்புக்கு அழகல்ல என்றான். அதிகமாக பேசுகிறாய் வேண்டுமென்றால் 50 பொற்காசுகள் தருகிறேன் இல்லையென்றால் ஓடிவிடு சிறை பிடித்து விடுவேன் என்று மிரட்டினார். ஏமாற்றுவது நல்லதல்ல , இதற்கான பதிலடியை தருகிறேன் என்று கூறி கொண்டே தெருக்களில் இசைத்து கொண்டு நடந்தான்.
அவன் நடக்க ஆரம்பித்ததும் ஒவ்வொரு வீட்டின் உள்ளே இருந்த குழந்தைகள் வெளியே வந்தனர். அவர்கள் அவன் இசைக்கு மயங்கி அவன் பின்னே நடக்க ஆரம்பித்தனர். நகர மக்கள் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள் என்று பின் தொடர்ந்தார்கள். குழந்தைகள் சுய நினைவில் இல்லை என்பதை உணர்ந்த மக்கள் அவர்களை தடுக்க ஆரம்பித்தனர். ஆனால் முடியாமல் போனது. சிறுது தோற்றம் சென்றதும் குழந்தைகள் மாயமாக மறைந்தனர். ஒரு சிறுவன் மட்டும் நடக்க முடியாமல் அங்கே விழுந்து கிடந்தான். மக்கள் அவனிடம் குழந்தைகளை பற்றி விசாரித்தனர்.
சிறுவனோ, " நானும் மயங்கியபடி தான் சென்றேன் , அவர் இசையில் பெரிய பாறையில் இடைவெளி போல தோன்றியது. அவர்கள் உள்ளே செல்லும்போது அந்த பாறையின் ஓட்டை அடைக்க ஆரம்பித்தது. என்னால் வேகமாக நடக்க முடியவில்லை. நான் செல்வதற்குள் அது மூடி கொண்டது" என்றான். குழந்தைகளை பறிகொடுத்த மக்கள் மேயரை நோக்கி சென்றனர். நடந்தவற்றை மேயரிடம் எடுத்து கூறினர். மேயரோ தன தவறை உணர்ந்தார். அவனுக்கு தகுந்த சன்மானம் கொடுத்திருந்தால் அவன் இப்படி செய்திருக்க மாட்டான் என வருந்தினார். குழந்தைகள் திரும்பி வரவில்லை. மக்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
குழந்தைகளே! இந்த கதை அந்த காலத்தில் உண்மையாக நடந்தது என்று மக்கள் இன்றும் நம்புகிறார்கள். சிலர் பணத்தை கொடுத்து குழந்தைகள் மீட்க பட்டனர் என்கிறார்கள். சிலர் கொடிய ப்ளேக் நோய் வந்தது. அந்த மனிதர் குழந்தைகளை காப்பாற்றி வேறு இடத்தில பத்திரமாக வைத்துள்ளார் என்கிறார்கள். எது உண்மையாக இருக்கலாம் என உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications