Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: தூங்கியே கழித்த ஆர்யா.. அம்மா செய்த சூப்பர் ட்ரிக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. யாருக்கெல்லாம் தூங்குறது ரொம்ப பிடிக்கும். உங்கள் நண்பர்களில் யாராவது தூங்குமூஞ்சி இருந்தால் இந்த கதையை அவங்களுக்கு சொல்லுங்க. இப்போ கதையை படிக்கலாமா..

ஆர்யா.. ஆர்யா.. எழுந்திடு நேரமாச்சு பாரு, ஸ்கூல் போகணும் இல்லையா சத்தம் கேட்டும் தூங்கிய ஆர்யா. கத்திக்கொண்டிருந்த அம்மாவின் குரல் மிகவும் அருகில் கேட்க அவன் படுக்கையறையில் எழுப்பி கொண்டிருந்தார். ஆனாலும் கண்களை இறுக்க கட்டிக்கொண்டு தூங்கி கொண்டிருந்தான் ஆர்யா.

kids story children stories tamil story

இன்று ஒருநாள் மட்டுமில்லை, ஆர்யாவின் அம்மாவிற்கு காலை நேரம் இப்படியே தான் எப்போதும் செல்கிறது. ஆர்யாவிற்கு தூங்குவது என்றால் மிகவும் பிடிக்கும். முக்கியமாக வீட்டு பாடங்களை முடிக்க வேண்டும் என்றால் உடனடியாக தூக்கம் தொற்றி கொள்ளும்.

அது நாளடைவில் அவன் நண்பர்கள் விளையாட கூப்பிட்டாலும் போகாமல் தூங்குவது முக்கியமாக மாறியது. அம்மா கடைக்கு சென்று ஏதாவது பொருள் வாங்க சொன்னாலும் அவனுக்கு கமிஷனுக்கு மிட்டாய்கள் கிடைக்கும் என்று சொல்லியும் மறுக்க ஆரம்பித்தான்.

இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த ஆர்யாவின் அம்மா, அடுப்பறையில் இருந்து கொண்டு எப்போதும் போல அழைக்க அவன் எழுந்திருக்கவில்லை. உனக்காக ஐஸ் கிரீம் வாங்கி கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்லியும் இது நம்மை முழிக்க வைக்க அம்மா செய்யும் நாடகம் என நினைத்து கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பிக்கிறான்.

சிறிது நேரம் கழித்து கீழே வந்து பிரிட்ஜை திறந்து பார்த்தால் ஒன்றும் இல்லை. அவன் நினைத்தது போலவே இது ஒரு பொய்யான செயல் என நினைத்து சிரித்து கொண்டே சாப்பிடும் மேஜைக்கு வந்தான். அங்கு காலியான 3 ஐஸ் கிரீம் டப்பாக்களை பார்த்தான். உடனே கத்தி கூச்சலிட்டு அம்மா என்னோட ஐஸ் கிரீம் எங்கே என்றான்.

அதற்கு ஆர்யாவின் அம்மா, நான் உன்னை பலமுறை கூப்பிட்டு பார்த்து நீ வரவில்லை என்றார். சரி பிரிட்ஜில் வைத்திருக்கலாமே என்று கேட்க, அது வேலை செய்யவில்லை என்றார். 3ம் நீங்களே சாப்பீட்டீர்களா என்று கேட்டதும், ப்ச்.. இல்லைடா அது பக்கத்துக்கு வீட்டு ரோஷன், வேணி இருவருக்கும் கொடுத்தேன் என்றார்.

கோவம் தலைகேறியவனாய், வேகமாக அறைக்கு சென்று மீண்டும் தூங்கினான். இந்த முறை அவனுக்கு மிகவும் பிடித்த ஒரு கார்ட்டூன் கேம் ஒன்றை 2மணி நேரம் விளையாடுவதற்காக வாங்கி வந்தார் அம்மா. அனால் இது ஒரு பொய் என மீண்டும் தூங்கினான்.

பின்னர் ஒரு இரண்டு மூன்று நாட்கள் கழித்து, பக்கத்து வீட்டு தீபிகா அவளது குட்டியான இரண்டு நாய் குட்டிகளை ஆர்யாவின் வீட்டிற்கு கொண்டு வந்தாள். அது பொசு பொசுவென அழகாக இருந்தது. அம்மா அவனை பல தடவை கூப்பிட்டும் தூங்கினான்.

ஒருநாள் அழகான வானவில் காட்சியை மகனுக்கு காண்பிக்க மிகவும் போராடி எழுப்பினார் ஆர்யாவின் அம்மா. ஆனால் அவன் அதையும் பார்க்காமல் தூங்கினான். இவை எல்லாவற்றையும் எழுந்த பிறகு அம்மா சொல்லும்போது வருத்தப்பட்டு கேட்பான். இந்த முறை அவனுக்கு தான் செய்வது தவறு. இதனால் நல்ல விஷயங்களை பார்ப்பது, விளையாடுவது, பிடித்ததை உண்பது என பலவற்றை இழந்துவிட்டதை உணர்ந்தான்.

படிப்படியாக தூக்கத்தை விட்டான். பள்ளியில் இருந்து வந்ததும் வீட்டு பாடங்களை முடித்தான். இப்போது அவன் பார்ப்பதற்கு, உண்பதற்கு, விளையாடுவதற்கு என நிறைய நேரங்கள் கிடைத்தன. அந்த அனுபவத்தை பெற்ற பிறகு அவன் எதையெல்லாம் இழந்துள்ளோம் என புரிந்து கொண்டான்.

ஆக குட்டீஸ், நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் இப்படி தூங்கி வழிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை சொல்லுங்கள். அளவுக்கு மீறி தூங்கினால் பலவற்றை இழக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+