குழந்தை நீதி கதைகள்: என்ன பங்கு, மாட்டிக்கிட்ட பங்கு.. அப்பாவை ஏமாற்றிய இளவரசிகள், சிக்கினார்களா?
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க. யார் எல்லாம் பரீட்சை எழுதி முடிக்க போறீங்க. யாருக்கு எல்லாம் பரீட்சை ஆரம்பிக்க போகிறது. சரி இந்த வாரம் நீங்க என்ன கதை படிக்க போறீங்க தெரியுமா அப்பாவை ஏமாற்றிய 12 இளவரிசைகளை பற்றித்தான். சரி எப்படி ஏமாற்றினார்கள், மாட்டி கொண்டார்களா என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஒரு ராஜ்ஜியத்தில் அரசர் ஒருவருக்கு 12 இளவரசிகள் இருந்தனர். அவர்கள் சிறுவயதில் இருந்தே அரசர் அவர்களுக்கு இரவு மற்றும் காலை வணக்கம் தெரிவிப்பதை விடாமல் தொடர்ந்து செய்து வருகின்றர். இளவரசிகள் வளரும் வரை எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்கள் தற்போது வளர்ந்த நிலையில் தான் ஒரு புரியாத புதிர் அரசருக்கு தோணி கொண்டிருந்தது.
அந்த கேள்வியின் விடையை கண்டுபிடிக்க உத்தரவும் பிறப்பித்தார். யார் கண்டுபிடித்து சொன்னாலும் அவர்களுக்கு தன் பெண்களில் ஒருவரை திருமணம் செய்து வைப்பதாகவும் அறிவித்தார். அரசரின் ஆணைக்கு இணங்க பல நாடுகளில் இருந்து இளவரசர்கள் வந்தார்கள். தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் இளவரசிகளை பார்க்கும் யாரும், அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை சொல்லமுடியாமல் திரும்பி போனார்கள்.

இந்த செய்தி நாடெங்கும் பரவ, அந்த நாட்டின் ஒரு சிப்பாய் இதை கேள்விபட்டு தனது பாட்டியிடம் அப்படி என்ன ராஜாவிற்கு கேள்வி என்று கேட்டான். அவனது பாட்டி ராஜ்யத்தில் சமையல்காரியாக இருந்தவர். அவர் சொன்னார், ராஜா தினமும் தனது மகள்களை முத்தமிட்டு எழுப்புவார். இரவும் முத்தமிட்டு தூங்க வைப்பார் . அவர்கள் வளர ஆரம்பித்ததும், தூங்கும்போது இருந்த உடைகள் மாறி, காலையில் அவர்களை எழுப்பும்போது நல்ல அலங்காரத்துடன் , கால்களில் நடனமாடுவதற்கான காலணிகளையும் அணிந்து இருப்பார்கள். இது எப்படி சத்தியம் என்பதுதான் ராஜாவின் மிகப்பெரிய கேள்வி.
முக்கியமாக இவர்கள் இரவில் என்ன செய்கிறார்கள் என அங்கிருக்கும் காவலாளிக்கு கூட தெரியவில்லை. அப்படியா பாட்டி, ஏன் யாருக்கும் தெரியவில்லை என்றான் சிப்பாய். நீ அதை கண்டுபிடிக்க போகிறாய் என்றால் உனக்கு சில விஷயங்கள் சொல்கிறேன் என்றார்.
சரி பாட்டி நான் போய் கண்டுபிடிக்கிறேன், என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். நீ அங்கு காவலுக்கு செல்லும்போது உனக்கு ஒரு பானம் தருவார்கள். அதை நீ குடிக்கக் கூடாது. மேலும் உனக்கு ஒரு மேலங்கி தருகிறேன் அதை சரியான சமயத்தில் உபயோகித்துகொள் என்றார். சிப்பாயும் வாங்கி கொண்டு இரவு வேலைக்கு சென்றான்.
அரசர் மகள்களுக்கு இரவு வணக்கம் சொல்லிவிட்டு கிளம்பினார். சிப்பாய் காவலுக்கு நிற்க, அங்கிருந்த சிப்பாய்களுக்கு இளவரசிகள் குடிக்க பானம் ஒன்றை கொடுத்தார்கள். அனைவரும் அதை குடிக்க மயக்கம் போட்டனர். சிப்பாய் அதை குடித்து மயக்கம் போட்டது போல நடித்தான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இளவரசிகள், சுரங்க பாதை வழியாக வெளியேறுவதை கண்டான் சிப்பாய். பாட்டி கொடுத்த மேலங்கியை போட்டான். அவன் யார் கண்ணுக்கும் தெரியாதவாறு மறைந்தான். இளவரசிகள் சென்ற பாதையில் வேகமாக சென்றான் அதன் வெளிப்புறத்தில் ஒரு ஆறு இருந்தது. அங்கே 12 படகுகளுடன் 12 இளவரசர்கள் இருந்தார்கள்.
சிப்பாய் அவர்களை எட்டி பிடிக்க ஓடினான். படகுகள் கிளம்ப ஆரம்பித்தன. கடைசி படகை பிடித்து தொங்கினான். அதில் இருந்த இளவரசன் படகு ஒரு ஓரமாக இழுப்பதை உணர்ந்தான். அனால் அவன் கண்ணனுக்கு ஏதும் தெரியவில்லை. அதற்குள் சிப்பாய் படகில் ஏறி அமர்ந்தான். ஆற்றின் கரைக்கு சென்றது படகு.
இளவரசிகள் துள்ளி குதித்து ஓட, அந்த இடம் தங்கம் , வெள்ளி நிறைந்த மரங்களால் சூழ்ந்திருந்தது. அங்கு விளையாடி களிப்பதை கண்ட சிப்பாய் ஆதாரமாக அதில் இருந்து ஒரு கிளையை முறித்தான். அந்த சத்தம் எல்லாருக்கும் கேட்டது ஆனால் அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

மேலும் அவர்கள் நல்ல பாடல் ஓடி கொண்டிருந்த ஒரு பெரிய அறைக்கு சென்றார்கள். இளவரசிகளும், இளவரசர்களும் அங்கே குதூகலமாக நடனமாடினார்கள். இதனால் தான் நீங்கள் காலையில் அப்படியே இருக்கிறீர்களா என நினைத்தான் சிப்பாய். மேலும் நடந்து கொண்டே ஒரு இளவரசியின் காலை மிதித்தான். அவள் கத்தவே எல்லோரும் திரும்பி பார்த்தார்கள். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் அவர்களுக்கு ஏதும் புரியவில்லை.
சிப்பாய் அங்கிருந்து கிளம்பினான். இளவரசிகள் விடிய விடிய அங்கயே குதூகலமாய் இருந்தார்கள். அரசரை காண சிப்பாய் வந்தான். என்னிடம் உங்கள் கேள்விக்கான விடைகள் உள்ளன என்றான். அரசர் ஆர்வத்தில் என்ன என்று கேட்டார். அவன் அந்த வெள்ளி மரத்தில் முறித்த கிளையை காண்பித்து, ஆற்றின் மறுபுறம் என்ன நடந்தது கரியால் வரைந்து காட்டி ,இளவரசிகள் இதைத்தான் செய்கிறார்கள் என்றான்.
அப்படியே இளவரசிகளை பார்த்தார் அரசர். இளவரசிகளும் தவறை ஒப்பு கொண்டார்கள். அரசர் அறிவித்தவாறே தனது மூத்த மகளை திருமணம் செய்து வைத்தார். மேலும் மற்ற மகள்களுக்கும் அந்த இளவரசர்களோடு திருமணம் செய்து வைத்தார். அவரது மனக்கவலை முடிவுக்கு வந்தது.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு












Click it and Unblock the Notifications