குட்டீஸ் ரெடியா.. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! தெரிந்த கதைதான்.. ஆனா டைமிங்ல நல்ல ரைமிங்கா படிக்கலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, பிரிந்து நின்றால் விளையும் தீமை" . ஹாய் குட்டிஸ், இந்த பழமொழி உங்கள்ல நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். ஒருவேளை தெரியலையா கவலைய விடுங்க. உங்களுக்கு புரியுற மாதிரி ஒரு குட்டி ஸ்டோரி சொல்லவா!

ஒரு காட்டுக்குள் நான்கு எருதுகள் நண்பர்களாக இருந்து வந்தார்கள். அவர்கள் எப்பொழுதும் ஒன்றாகவே புல் மேய செல்வார்கள். அருகில் இருக்கும் ஆற்றில் நீர் அருந்த சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். இதையே வாடிக்கையாக வைத்திருந்தது அந்த நான்கு எருதுகள்.

 Short story for Kids : The tale of four ox and The lion

அந்த காட்டில் இருந்த சிங்கம் இதை பல நாட்களாக கவனித்து கொண்டு வந்துள்ளது. அதை அறியாத எருதுகள் அவர்களது வழக்கமான செயல்களை செய்து கொண்டு இருந்தன.

சிங்கத்திற்கு அந்த எருதுகளை வேட்டையாட ஆசை வந்தது. ஒருநாள் வழக்கமாக எருதுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே, மெதுவாக நகர்ந்து பாய்வதற்கு ஆயத்தமானது. ஒரு எருதை குறியும் வைத்தது. சிங்கம் பாய்வதற்கும் எருதுகள் சுதாரித்து கொள்ளவும் சரியாக இருந்தது. சட்டென நிதானித்து கொண்ட நான்கு எருதுகளும் சிங்கத்தை துரத்தி அடித்தன.

வடை போச்சே என வேதனை பட்ட சிங்கம் ஒரு திட்டம் தீட்ட ஆரம்பித்தது. எப்படியாவது எருதுகளை தனது பசிக்கு இரையாக்கி விட வேண்டும் என்பதால் சரியான திட்டத்தையும் வகுத்தது. நான்கு எருதுகளும் ஒன்றாக இருந்தால் கண்டிப்பாக ஜெயிக்க முடியாது. அதனால் முதலில் பிரிக்க வேண்டும் என எண்ணியது. பிறகு அவர்களின் ஆசையை தூண்டினால் வென்றிடலாம் என்று முடிவு பண்ணியது.

சிங்கம் எருதுகளிடம் தன்னை நல்லவன் போல காட்டிக்கொண்டது. ஒவ்வொரு எருதுவிடமும் தனித்தனியாக நட்பு வைத்து கொண்டது. சரியான சமயத்திற்காக காத்து கொண்டிருந்தது.

வழக்கமாக அந்த நாள் தொடங்கவும் சிங்கம் ஒரு எருதுவை தனியாக அழைத்து, 'நான் ஒரு இடத்தில் பச்சை பசேல் என புல்வெளியை பார்த்தேன். உன்னை அங்கு அழைத்து செல்கிறேன். மற்றவர்களிடம் நீ சொன்னால் அது உனக்கு போதுமானதாக இருக்காது' என்றது.

சிங்கத்தின் சூழ்ச்சியை அறியாத எருதுவோ அதற்கு சரி என தலையாட்டியது. சிங்கத்தை நம்பி தனியாக சென்ற எருதுவை அடித்து கொன்றது. இதே பாணியை அடுத்த எருதுவிடமும் சொல்ல அதுவும் நம்பி இறந்தது.

இரண்டு நண்பர்களை பிரிந்த மற்ற எருதுகள் தேடி திரிந்தன. அந்நேரம் சிங்கம் அதே சூழ்ச்சியை மற்ற ஒரு எருதுவிடம் சொல்ல அது இன்னொரு எருதுவிடம் இதை கூறி சிங்கத்தின் மேல் தனக்கு சந்தேகம் இருப்பதாய் சொன்னது.

இதுவோ சிங்கத்திடம், 'நான் வரவில்லை' என்றது. சிங்கம் இதை அடுத்த எருதுவிடம் கூற அது நண்பன் சொன்னதை நினைவு படுத்தி கொண்டு உஷாராகியது. இரண்டு எருதுகளும் தங்கள் நண்பர்களை இந்த சிங்கம் சதி செய்து கொன்றுவிட்டது என்பதை புரிந்து கொண்டன. சிங்கத்தையும் அடித்து துரத்தின.

ஆக குழந்தைகளே ஒருபோதும் தனியாக செல்லாதீர்கள். சில நேரங்களில் உங்களை சுற்றியே தீயவர்கள் கண்காணித்து கொண்டு இருப்பார்கள். முடிந்தவரை நண்பர்கள் அல்லது பெற்றோருடன் இருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+