சென்னைல ஏன் இத்தனை பாலம் இருக்குனு.. அப்போ புரியல.. ஆனா இப்போ புரியுது!
சென்னை: பெருமழை பெய்யும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கம் போல் வானிலை ஏமாற்றிவிட, இம்முறை முன்னெச்சரிக்கையாக கார்களை மேம்பாலங்களில் நிறுத்தியவர்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
அனுபவமே சிறந்த ஆசான்... அதனால்தான் கடந்த மழைக்காலங்களில் கார்களை வெள்ளத்தில் மூழ்க விட்டுப் பாதிக்கப்பட்டவர்கள், இந்த முறை அதி கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு வந்த உடனேயே துரிதமாகச் செயல்பட ஆரம்பித்து விட்டனர். வழக்கம் போல், கடைகளுக்குச் சென்று பால் பாக்கெட்டுகள், தயிர், முட்டை, பிரட், வெங்காயம், தக்காளி என அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வீட்டில் சேமித்து வைத்துக் கொண்டனர்.

இதுகூட அடிக்கடி மழைக்காலங்களில் மற்றும் கொரோனா ஊரடங்கு நாட்களில் நாம் அதிகம் பார்த்தக் காட்சிகள்தான் என்றாலும், இந்தமுறை அதிகம் ஆச்சர்யப்பட வைத்தது வேளச்சேரி மேம்பாலம்தான். வெள்ளம் வந்தால் என்ன செய்வது என முன்னெச்சரிக்கையாக கார் வைத்திருந்தவர்கள் எல்லாம், தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் பார்க்கிங் செய்ய, ஊருக்கு மட்டுமல்ல.. அந்த பாலத்திற்கும் கடந்த சில நாட்களாக கார்காலம்தான்.
ஆனால் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்கும் நாட்களில் வானிலை சொதப்புவது வழக்கமான விசயம்தான் என்பதுபோல், இந்தமுறையும் ரெட் அலர்ட் சென்னை மக்களை ஏமாற்றி விட்டது. இருந்தாலும் தங்களது முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப் பாராட்டுவது போல், தங்களைத் தாங்களே மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications