
எப்பய்யா சம்பளம் போடுவீங்க.. அடிக்கடி ஏடிஎம்க்கு போனா வாட்ச்மேன் ஒருமாதிரியா பார்க்குறாரு!
சென்னை: மாதத்தின் முதல் வாரம் என்பதால், சம்பளம் பற்றிய மீம்ஸ்களால் நிரம்பிக் கிடக்கிறது சமூகவலைதளங்கள்.
அரசு நிறுவனங்களைத் தவிர, மற்ற தனியார் நிறுவனங்களில் எல்லாம் ஒன்றாம் தேதி சம்பளம் போடும் தினமாக மறந்தே பல யுகங்கள் ஆகி விட்டது. நிறுவனத்திற்குத் தகுந்த மாதிரி சம்பள நாளும் மாறி, மாறி இருக்கிறது. அதனால்தானோ என்னவோ, தேதி நான்கு ஆகியும் இன்னமும் சம்பளம் பற்றிய மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் அதிகம் பார்க்க முடிகிறது.
பெரும்பாலானோருக்கு சம்பள தேதி ஐந்துக்கு மேல் இருப்பதால், மாதத்தின் முதல் வாரமே அவர்களைப் பொருத்தவரை, பொருளாதார ரீதியாக மாதக்கடைசி தான். அதனால் கையில் காசில்லை என அவர்கள் ஒருபுறம் மீம்ஸ் போட்டு புலம்பிக் கொண்டிருக்க, சம்பளம் வாங்கியவர்களும் வாங்கிய சம்பளம் முழுவதும் இஎம்ஐ, வாடகை, வீட்டுச் செலவு என அதற்குள் காலியாகி விட்டதே என தங்கள் பங்கிற்கு புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான சம்பளம் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





