தொகுதி பங்கீட்டில் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் என்ன வித்தியாசம்? நச்சென சொல்லும் ஒத்த மீம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இந்த விஷயத்தில் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் என்ன வித்தியாசம்?

    சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்ததற்கு கடும் எதிர் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் நிலவுகிறது.

    திமுக ஆதரவாளர்களாக இருந்தவர்களே, திமுகவின் இந்த முடிவுக்கு எதிராக களமாடுவதை பார்க்க முடிகிறது. கருணாநிதி திமுக தலைவராக இருந்தபோது, சில சிறு கட்சிகளுக்கு, உங்களுக்கு எனது உள்ளத்தில் இடம் உள்ளது. சீட் ஒதுக்கதான் முடியவில்லை என நயமாக பேசி, மனது நோகாமல் அனுப்பி வைப்பார்.

    How MK Stalin is different from Karunanidhi in seat sharing

    காங்கிரசுக்கு கருணாநிதி கொஞ்சம் தாராளம் காட்டியுள்ளார் என்பது உண்மைதான் என்றாலும், அப்போதைய சூழல்களில் சில நிர்பந்தங்களுக்கு திமுக உள்ளானது. காங்கிரசும் கூட கடந்த காலங்களில் இப்போதை விட பலமாகவும் இருந்தது.

    ஆனால் இப்போது திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை கொடுத்துவிட்டார். கருணாநிதி தொகுதி பங்கீடாக இருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும் என நெட்டிசன்கள் குமுறுகிறார்கள்.

    அதற்கு இந்த மீம் ஒரு உதாரணம். படிக்காதவன் என்ற திரைப்படத்தில், ரஜினிகாந்த் தனது சகோதரர் கதாப்பாத்திரத்திற்கு தனது கையில் உள்ள பணத்தை எல்லாம் கொடுப்பார். தம்பியும் தாராளமாக வாங்கிக்கொள்வார். அந்த தம்பி கதாப்பாத்திரம்தான் கருணாநிதி என்கிறது இந்த மீம்.

    ஆனால், நாடோடிகள் படத்திலோ, சசிகுமார் கதாப்பாத்திரம் பஸ்சில் செல்லும் நண்பன் ஜோடிக்கு தன்னிடம் உள்ள பணம், செயினையெல்லாம் கழற்றி கொடுத்தனுப்பும் காட்சி இருக்கும். சசிகுமார் போல ஸ்டாலின் தாராளம் காட்டிவிட்டதாக கூறுகிறது இந்த மீம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+