"முதல் மேட்ச்-க்கு பிறகு வண்டி ஓடாது" காவ்யா மாறனின் ஐதராபாத்தை வீழ்த்திய கேகேஆர்.. பெஸ்ட் மீம்ஸ்!
கொல்கத்தா: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி தோல்வியடைந்ததையடுத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.
சீனா தானா படத்தில் ஒருவரின் தலையில் இருந்து கையை எடுத்தால், அந்த நபர் கழுத்தை கடிக்கும் வினோத பிரச்சனை இருக்கும் போது, தேவையில்லாமல் சென்று வாக்குவாதம் செய்து வடிவேலு சிக்கலில் மாட்டிக் கொள்வார். அப்போது அதற்கு முன்பாக சிக்கியவர், "அண்ணே.. ரொம்ப நன்றி.. 2 நாளா மாட்டிக்கிட்டு இருந்தேனே" என்று சொல்வார். அப்படி வினோத நோயால் பாதிக்கப்பட்டவராக வெங்கடேஷ் ஐயரையும், இத்தனை நாட்களாக மாட்டி கொண்டவராக மும்பை அணியையும், புதிதாக மாட்டிக் கொண்டவராக ஐதராபாத் அணியையும் மாற்றி, "வந்து காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி அண்ணே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குதிச்சிடுடா கைப்புள்ள மொமண்ட்.

நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் படத்தில் கிரிக்கெட் விளையாடும் போது விக்கெட் வீழ்த்தும் பக்ஸ், "டேய் தம்பி.. ஊஊஊஊஊஊஊ.. டேய் தம்பி" என்று வம்புக்கு இழுத்து ஜாலியாக கொண்டாடுவார். அதில் வரும் பகவதி பெருமாளை மற்ற அணிகளின் ரசிகர்களாக மாற்றி, ஐதராபாத் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்திற்கு "ஊஊஊஊஊஊ" என்று கொண்டாடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா மொமண்ட்.

பட்ஜெட் பத்மநாபன் படத்தில் ஆட்டோ ஓட்டும் வடிவேலு, "6 மணிக்கு மேல வண்டி ஓடாது" என்று சொல்லுவார். அதில் வரும் வடிவேலுவை இஷான் கிஷனாக மாற்றி, "முதல் மேட்ச்-க்கு அப்புறம் வண்டி ஓடாது" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பல்தான்ஸ் ரசிகர்களின் மனசாட்சி.

சிவா மனசுல சக்தி படத்தில் சந்தானத்தை பார்த்து ஜீவா, "நீ பகல்ல ஸ்வெட்டர் போடும் போதே தெரியும்.. பெருசா பல்ப் வாங்க போறனு" என்று சொல்வார். அதில் வரும் சந்தானத்தை ஐதராபாத் அணியாகவும், ரசிகர்களாக ஜீவாவையும் மாற்றி, "நீ டாஸ் வின் பண்ணி பவுலிங்னு சொல்லும் போதே தெரியும்.. பெரிய பல்பா வாங்க போறனு" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் எல்லா லைட்டையும் ஆஃப் பண்ணுங்கப்பா மொமண்ட்.

மஜா படத்தில் வடிவேலு, இந்த புலிப்பாண்டி மோசமானவன் தான்.. ஆனா அது குழந்தைகளுக்கு கிடையாது என்று சொல்வார். அதனை அப்படியே டிராவிஸ் ஹெட்டாக மாற்றி, "இந்த டிராவிஸ் ஹெட் மோசமானவன் தான்.. ஆனால் இந்த கேகேஆர் கிட்ட அல்ல" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் சோதனை மேல் சோதனை ரகம்.

-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications