Senthil Balaji: விருப்பம் போல் மனு தாக்கல் செய்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும்! செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கை இழுத்தடிக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது எனவும், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி விருப்பம் போல் மனு தாக்கல் செய்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் சென்னை சிறப்பு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக புகார் தொடுக்கப்பட்டது. அதாவது கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தின் போது போக்குவரத்துத் துறையில் பணி நியமனங்கள் பணம் பெற்றுக்கொண்டு நிரப்பப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

Senthil Balaji Bail will be cancelled if petitions are filed at one s own whim

இதன்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்பட 2,200-க்கும் மேற்பட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இன்று நீதிபதி யோகேஷ்வரன் முன்பு இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆஜர் ஆகினர். அப்போது நீதிபதி, "குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஒருவருக்கு ஒருவர் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்வதை ஏற்க முடியாது. குறிப்பிட்ட காலத்திற்குள் அனைவரும் மனு தாக்கல் செய்ய வேண்டும். எப்போது மனு தாக்கல் செய்யப்படும் என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

தேவையின்றி வழக்குகளை இழுத்தடிக்கும் எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது. திட்டமிட்டு இந்த வழக்கை இழுத்தடிக்கும் நவடிக்கைகளில் ஈடுபட்டால் நீதிமன்றம் அதனை அனுமதிக்காது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி விருப்பம் போல் மனு தாக்கல் செய்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாரை நோக்கி கேட்ட நீதிபதி, நீங்கள் எப்போது மனு தாக்கல் செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, விரைவில் வழக்கில் இருந்து விடுதலை செய்ய மனு தாக்கல் செய்ய உள்ளதாக பதில் அளித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+