சீன் படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்தது யார் தெரியுமா? பிரபல டான்ஸ் மாஸ்டரின் மனைவி தான்
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் சீன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சூர்யா வழக்கமான மாஸ் ஹீரோ கதையிலிருந்து விலகி கொஞ்சம் வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது படத்தின் முக்கியமான அம்சம். அதுபோல படத்தில் அதிகமான சோசியல் மீடியா பிரபலங்கள் நடித்திருக்கும் நிலையில் அதில் சூர்யாவுக்கு அம்மாவாக பிரபல டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மனைவியும் நடித்திருக்கிறார். அவர் ஏற்கனவே சோசியல் மீடியாவில் பிரபலம் தான்.
சூர்யாவுக்கு அம்மாவாக எப்போதும் மது அருந்தி கொண்டே இருக்கும் கேரக்டரில் நடித்திருப்பவர் அனுராதா ஸ்ரீதர். அவர் டான்ஸ் மாஸ்டரும், நடன கலைஞருமான ஸ்ரீதரின் மனைவி என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தில் அவரை பார்த்ததும் இவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று ஒரு சிலருக்கு தோன்றி இருக்கலாம். சில நாட்களாக அவரைப் பற்றிய இணையத்தில் தேடல் அதிகமாக இருக்கிறது. ஆனால் அவர் தன்னுடைய மகளுடன் சில வருடங்களுக்கு முன்பு டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆனது.

டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மனைவி
அம்மா மகளா இது? எவ்வளவு அழகா ஆடுறாங்க? என்று பலரும் வியந்து போயிருந்தனர். அப்போதுதான் இது டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மனைவி மற்றும் மகள் என்பது பலருக்கும் தெரியும். அதேபோல இப்போ சீன் படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாகவும் இவர் மிரட்டி இருக்கிறார். சில காட்சிகளில் தான் அந்த படத்தில் வருகிறார். ஆனால் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனாவுக்கு இருந்த ஹைப் இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவருடைய கேரக்டர் வடிவமைத்த விதம் தான் கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தி இருக்கிறது.
சீன் பட கேரக்டர்
சூர்யாவின் அப்பா ஆனந்தராஜ் பெரிய போலீஸ் ஆபீஸராக இருந்தவர். அப்படி இருக்கும்போது அவர் சாராயம் விற்கும் பெண்ணை காதலித்த திருமணம் செய்து கொண்டார் என்று சொல்கிறார்கள். படத்தில் அனுராதாவோ ஒரு சம்பவத்தை பார்த்தால் அங்கு என்ன நடந்திருக்கும் என்று யோசித்து கரெக்டாக கண்டு பிடிக்க கூடிய திறமை உள்ளவர். அப்படிப்பட்டவர் எப்போதும் குடித்துக் கொண்டு இருக்கிறார். அவர் ஒரு போலீஸ்காரரை கல்யாணம் பண்ணி இருக்கிறார், பிறகு இருவரும் பிரிந்து போய்விட்டார்கள் என்று கதையை சொல்லி இருக்கிறார்கள். இதுதான் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விக்ரம் பட டீனா
விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா ஆரம்பத்தில் சாதாரண கேரக்டரில் வந்தாலும் ஒரு கட்டத்தில் அவருடைய அதிரடி ரசிகர்களுக்கு பெரிய சப்ளையாக இருக்கும். அதேபோல சீன் படத்தில் சூர்யாவின் அம்மா குடித்துக்கொண்டு சாராயம் விற்க்கும் பெண்ணாக இருந்தாலும் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும்போது அவர் கொடுக்கும் க்ளூ படத்திற்கு ஒரு முக்கிய திருப்பம் தான். அதை இன்னும் கொஞ்சம் பெஸ்ட்டாக செய்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
மகளுடன் டான்ஸ்
சரி, இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த அனுராதா யார் என்று தெரிந்த பிறகு அவருடைய பழைய டான்ஸ் வீடியோக்களை எல்லாம் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் வைரல் பண்ணி வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் தன்னுடைய மகளுடன் வா வா பக்கம் வா என்ற பாடலுக்கு ஜாலியாக அவர் டான்ஸ் ஆடியது பெரியதாக வைரல் ஆனது. அதற்குப் பிறகு அடிக்கடி தன்னுடைய மகளுடன் டான்ஸ் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் இப்போது அவருக்கு கிடைத்திருக்கும் சினிமா வாய்ப்பு அவருடைய அடுத்த கட்டத்திற்கு படிக்கட்டாக அமைந்திருக்கிறது. இவர் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மனைவி என்பது பலருக்கு தெரியாததால் அவருடைய சீன் பட காட்சியை ஆச்சரியத்தோடு ஷேர் செய்து வருகின்றனர்.




Click it and Unblock the Notifications
