நான் மட்டும் கலெக்டராக இருந்திருந்தால்.. அவரை என்கவுன்ட்டர் பண்ணிருப்பேன்.. கொந்தளித்த ஜெயக்குமார்!
சென்னை: நான் மட்டும் அந்த கலெக்டராக இருந்திருந்தால், என்கவுன்ட்டர் செய்திருப்பேன் என்று அதிமுக நிர்வாகி ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக பேசிய ஜெயக்குமார், ஐஏஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என்றும் சாடியுள்ளார்.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பெண் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக தலைமைச் செயலாளரிடம் ஆட்சியர் பத்மஜாவின் கணவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

ஆனால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் இதுவரை அமைதி காத்து வருகிறார். இதுதொடர்பாக பொதுவெளியில் எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதனால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்நேரம் நான் மட்டும் அந்த கலெக்டராக இருந்திருந்தால், அவரை என்கவுன்ட்டர் செய்திருப்பேன்.
சுட்டு தள்ளி இருப்பேன்.. யாராக இருந்தாலும் கட்டிப் போட்டிருப்பேன். வீடு தேடி ஒருவர் வந்து தொல்லை கொடுத்தால், என்ன செய்வீர்கள்.. அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க வேண்டுமா? அடித்து உதைத்து சுட்டு தள்ள வேண்டும். அந்த மாதிரி செய்திருக்க வேண்டும். ஆனால் பாவம் அந்த கலெக்டர்.. எவ்வளவு மனவேதனை இருந்திருக்கும்.. ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை..
சாமானிய மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். ஜெயக்குமாரின் ஆவேசம் அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் சாமானிய மக்கள் மத்தியில் பற்றிக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொந்தளித்து வருகின்றன.
நேற்றிரவு தவெக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் கடைசியாக தான் அருள் விக்னேஷ் ரிசார்டில் இருந்து புறப்பட்டார். இதனால் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது தொடர்பாக விசாரிக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அதிருப்தியில் அருள் விக்னேஷ் பத்திரிகையாளர்களை கூட சந்திக்காமல் கண்ணாடியை மூடி கொண்டு சென்றதாக பேசப்படுகிறது.



Click it and Unblock the Notifications
