தப்பு செய்த 2 எம்எல்ஏக்களுக்கு தீபாவளி பரிசு தந்த "ஸ்ட்ரிக்ட் ஆபிஸரு"! விஜய் மீது ஸ்டாலின் காட்டம்
சென்னை: தவறு செய்தால் விடமாட்டேன் என கூறிய ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் (விஜய்) தற்போது தவறு செய்த எம்எல்ஏக்கள் அருள் விக்னேஷ், ரவிசங்கர் ஆகியோருக்கு தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார் என முதல்வர் விஜய்க்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.

முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'Strict officer' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!
Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை! என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி 6 மாதங்களை நிறைவு செய்துள்ளது. இந்த 6 மாத காலத்தில் தவெக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி மாமல்லபுரத்தில் ஒரு நட்சத்திர் ஹோட்டலில் நடந்த இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏக்களுக்கு விஜய் பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாக சொல்லப்படுகிறது. " தொகுதி மக்களுக்காக பணியாற்ற வேண்டும். அதற்காகத்தான் அவர்கள் நமக்கு ஓட்டு போட்டுள்ளார்கள். சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளேன்.
எந்த டிராப்பிலும் சிக்காமல் மக்கள் நலத் திட்டங்களை செய்ய வேண்டும். என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்" என முதல்வர் விஜய் தெரிவித்தாராம். கூட்டத்தின் முடிவில் அனைத்து தவெக எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் விஜய் பட்டு வேட்டி - பட்டு சேலை வழங்கினாராம். மேலும் அவர்களுடன் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக சொல்லப்படும் அருள் பிரகாஷ் மீதும், தொகுதியை சேர்ந்த நபர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இவ்வாறு தீபாவளி பரிசு கொடுத்தனுப்பியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.



Click it and Unblock the Notifications
