இப்போ மட்டும் என்ன பனி மூட்டமாவா இருக்கு..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் வானிலை மையத்தின் தகவல் மற்றும் அமைச்சர்களின் வருண யாகத்தை கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வெயில் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு கொளுத்தி வருகிறது. வெயிலின் தாக்கம் மற்றும் அனல் காற்றால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் வானிலை மையம் வட தமிழகத்தில் வெப்பக்காற்று அதிகரிக்குத் என வானிலை மையம் எச்சரித்துள்ளதையும், அமைச்சர்கள் வருண யாகம் நடத்துவதையும் நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர். இதுதொடர்பாக குவிந்து வரும் மீம்ஸ்களில் சில..

பனி மூட்டமாவா இருக்கு..?

இப்போமட்டும் என்ன பனி மூட்டமாவா இருக்கு.. என கலாய்க்கிறது இந்த மீம்..

தண்ணியை திறந்துவிடு

மழை நீரை சேமிக்க தெரியாது எங்களுக்கு.. மழை நீரை சேமிக்க நேரமும் இல்ல எங்களுக்கு... பெரிய மனுசனுக்கு அழகா தண்ணியை திறந்துவிடு எங்களுக்கு...

ஒன்னுமே இல்ல..

இப்போல்லாம் நிலத்தடி நீர்... ஒன்னுமே இல்ல.. நல்லா பாருங்க..

இப்ப பெய்ய வேண்டாம்.

இப்ப மட்டும் வானிலை மாற்றத்தால மழை பேஞ்சுச்சின்னா கோயில்ல பண்ண யாகத்தாலதான் மழை வந்துச்சுன்னு சொல் மக்கள நம்ப வச்சு காசு பார்க்கும் ஒரு குரூப்பு. இன்னும் ரெண்டு நாளு சேர்த்துவேணா கஷ்டத்த அனுபவிச்சுகிறோம். ஆனா மழை இப்ப பெய்ய வேண்டாம்.

உன் மேலதான் சந்தேகம்

எனக்கென்னவோ உன் மேலதான் சந்தேகமா இருக்கு இந்த ஐடியாவ நீதான் கொடுத்து எல்லா கோயில்லயும் செய்ய வச்சிருப்பன்னு!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Tamilnadu people suffered a lot by the temperature. on this memes creators released memes on internet.
Please Wait while comments are loading...