விட்டா புது ரூ. 2000 நோட்டுக்கு சார்ஜ் போடச் சொல்லுவாங்களோ?
சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மக்கள் கடந்த சில நாட்களாக பெரும் சில்லறைப் பிரச்சினையில் தவித்து வருகின்றனர்.
கையில் காசிருந்தும் சாப்பிட வழியில்லாமல் தவித்தவர்கள் ஏராளம். அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளநோட்டு பதுக்கலைத் தடுக்கும் வகையில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் பல்வேறு புதிய தொழில்நுப்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டிருப்பதாக சமூகவலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அவை வதந்தி என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ள நிலையில், அது தொடர்பாக பல்வேறு மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகின்றன. இதோ அவற்றில் சில...

சார்ஜ் போடச் சொல்லுவாங்களோ..?
புதிய ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டு பதுக்கலைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இடம் பெற்றிருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பலரது மனதில் முளைத்த சந்தேகம் இது...!

இதென்ன புதுக்கதையா இருக்கு...
புதிய ரூபாய் நோட்டுகள் குறித்து ஆளாளுக்கு ஒரு புதுக்கதைகளை கிளப்பி விட்டு வருகின்றனர். அந்தவகையில் இது புதுக்கதை.

செல்பி பாய்ஸ் தொல்ல தாங்கலப்பா...
ஓட்டுப் போட்டு விட்டு வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டோம் என சமூகவலைதளத்தில் பெருமையாக பதிவிட்டவர்கள் எல்லாம், தற்போது புதிய ரூபாய் நோட்டு வாங்கி விட்டோம் என செல்பியுடன் கடுப்பேற்றுகிறார்கள்.

அட்ராசிட்டிகள்...
எதைப் பார்த்தாலும் அதனுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் மக்கள், புதிய ரூபாய் நோட்டுக்களை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?

கும்பி கூழுக்கு அழுவுது...
மாதத் துவத்திலேயே மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் பலர் சாப்பாட்டிற்கே கூட காசில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, சில சில்லறைகளின் அட்ராசிட்டிகள் தாங்க முடியாததாக உள்ளது.


Click it and Unblock the Notifications
