For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றை தாண்டி வருவது காதல் மட்டும் அல்ல.. டெங்கு காய்ச்சல் கூட தான்!

டெங்கு காய்ச்சலை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் வளைய வருகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: டெங்கு காய்ச்சலை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் வளைய வருகின்றன.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் டெங்கின் தாக்கம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் குறித்தும் அரசின் நடவடிக்கை குறித்தும் சமூக வலைதளங்களில் கேலிக்கையான கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் சில..

இதையும் சேர்த்துக்கொள்ளலாம்

கொசு கடிப்பது டெங்கு நோயை உருவாக்கும் #சினிமா போடும்முன் இதையும் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறது இந்த டிவிட்

நாங்க தங்கவே இடம் இல்லை

டெங்கு கொசு வளர இடமளிப்போருக்கு 6 மாதம் சிறை! நாங்க தங்கவே இடம் இல்லை இதுல கொசுக்கு இடமா? இன்னும் என்னன கிருக்குதனம்லாம் பன்ன போராங்களோ என்கிறது இந்த டிவிட்

மக்கள் தொகையை குறைக்க

நாளுக்கு நாள் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்...மக்கள் தொகையைக் குறைக்க தமிழக அரசு தீவிர முயற்சி என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்

காதல் மட்டும் அல்ல

ஜாதி,மதம்,மொழி,இனம் ஆகியவற்றை தாண்டி வருவது காதல் மட்டும் அல்ல.......டெங்கு காய்ச்சல் கூட தான்.. டைமிங் பஞ்ச் என்கிறது இந்த டிவிட்

அட்ரஸ் கேட்டிருப்பாங்களோ

கொசுவே பிடிச்சு அட்ரஸ் கேட்டிருப்பாங்களோ..!! என கேட்கிறார் இந்த நெட்டிசன்

மக்கள் விரும்பினால் குறைத்துக்கொள்வோம்

மக்கள் விரும்பினால் , டெங்கு காய்ச்சல் உண்டாக்குவதை குறைத்துக்கொள்வோம் - கொசு.. என கொசு கூறுவதாக உள்ளது இந்த டிவிட்

English summary
Netizens making fun discuss on Social media about dengue fever. Dengue fever spreading in Tamil Nadurapidly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X