என்னது ஐடி ரெய்டா? என்னப்பா சொல்றீங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி ரெய்டு-வீடியோ

  சென்னை: சசிகலா குடும்பத்தினர் மற்றும் ஜெயா டிவி ஆகிய இடங்களில் ஐடி ரெய்டு நடப்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் உட்பட 190 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

  ஜெயா டிவி, ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கோடநாடு எஸ்டேட் என காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த அதிரடி சோதனை குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  ஐடி ரெய்டால் ஸ்கேன்

  சசிகலா குலமே இலக்கு வைக்கப்பட்டுள்ளது... சொத்துக்கள், கூட்டாளிகள், குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரும் ஐடி ரெய்டால் ஸ்கேன் செய்யப்படுகின்றனர்..

  நல்ல விஷயம்

  தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட 187 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை- நல்ல விஷயம் !
  தற்போதய அதிமுக அமைச்சர்கள் எல்லாரும் காமராஜரை போல் செயல்படுபவர்கள் போல! என்கிறார் இந்த வலைஞர்..

  அதிகம் கிடைக்கும்

  வருமான வரித்துறையே ஜெயாடிவி உங்களை ஏமாற்றாது.. நீங்கள் நினைத்ததை விட அதிகம் கிடைக்கும்.. கறுப்புப்பண ஒழிப்பு நாள்.. இரண்டாவது ஆண்டு சசிகலா குடும்பத்தில் இருந்து தொடக்கம்.. நல்ல திட்டம்.. என்கிறது இந்த டிவிட்..

  என்னப்பா சொல்றீங்க?

  என்னது ஐ டி ரெய்டா? என்னப்பா சொல்றீங்க? என கேட்கிறார் இந்த நெட்டிசன்...

  மாட்டிகிச்சே.. மாட்டிகிச்சே..

  இந்த சூழ்நிலைக்கான பாடல்.. மாட்டிகிச்சே... மாட்டிகிச்சே.. மாட்டிகிச்சே.. என்கிறார் இந்த வலைஞர்..

  மரண மாஸ்

  மரண மாஸ்... என்கிறார் இந்த நெட்டிசன்..

  சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம்

  முன்ன எல்லாம் ஒரு வீட்டுக்கு மட்டும் ரெய்டு போவாங்க,ஆன இப்ப சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம் போறாங்க.. என்கிறது இந்த டிவிட்..

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens making fun of IT raid in Sasikala family members and friends house. IT raiding at Jaya TV and Kodanadu estate.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற