மகளிர் தினத்தன்னைக்கு போற்ற வேண்டியது... மறுநாளே போட்டுத்தள்ள வேண்டியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மாணவியை குத்திவிட்டு ஓட முயன்றவரை விரட்டி பிடித்த பொதுமக்கள்- வீடியோ

  சென்னை: இன்று பட்டபகலில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளி அழகேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரு தலை காதலில் கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

  கொலையாளி அழகேசனை கைது செய்துள்ள போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே இந்த கொலை குறித்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றனர்.

  வெளிநாட்டுக்கே போயிடலாம்

  என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் இப்போ தோணுது பேசாம அங்கேயே போயிராலமோனு ஊராட கருமம் இது. என அஸ்வினி கொலை குறித்து கேட்கிறார் இந்த நெட்டிசன்

  வெறும் வாய் வார்த்தைதான்

  கட்டாய காதல்.. காதலிக்கவில்லை என்றால் கொலை இந்த நாட்டில் சுதந்திரம் பெற்றோம் என்று வெறும் வாய் வார்த்தையில் தான் கூறவேண்டும். என்கிறார் இந்த வலைஞர்

  யாரு கவலைப்படபோறா?

  மீனவர்களும், மாணவிகளும் கொல்லப்படுவது நம்ம ஊருக்கு ஒன்னும் புதுசு இல்லயே. ரெண்டு நாட்களுக்குப் பின் யாரு இங்க கவலப்பட போறா?! என கூறுகிறார் இந்த நெட்டிசன்

  மறுநாளே

  மகளிர் தினத்தன்னைக்கு போற்ற வேண்டியது... மறுநாளே போட்டுத்தள்ள வேண்டியது..என்னங்கடா.. என விரக்தியுடன் கேட்கிறார் இந்த வலைஞர்

  இன்றைக்கு கொலை

  இதான்யா நம்ம நாட்டோட லட்சணம்...
  நேற்றைக்கு பெண்கள் தினம் கொண்டாட வேண்டியது...
  இன்றைக்கு ஒரு பொண்ண குத்தி கொல்ல வேண்டியது... என கூறுகிறது இந்த டிவிட்

  தூக்கில் போட்டால்

  கல்லூரிவாசலில் மாணவி கத்தியால் குத்தி கொலை.
  அன்று நுங்கம்பாக்கத்தில் சுவாதி, இன்று #Aswini பெண்களுக்கெதிரான ஒருதலை காதல் முற்றிப்போய் கொலையால் முடிகிறது. இவனை பிடித்து பொதுமக்கள் முன் தூக்கில் போட்டால் தான் இதுமாதிரி சம்பவங்கள் நடக்காது.. என்கிறார இந்த நெட்டிசன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens sharing their views on Ashwini murder. College student Ashwini killed by one side love in Chennai.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற