ஸ்கூல்க்கு மட்டும் லீவு விடுவீங்க.. ஏன் நாங்க மனுஷங்க இல்லயா? குமுறும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கனமழை எச்சரிக்கை...சென்னை உள்பட 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை-வீடியோ

  சென்னை: கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளிப்பதற்கு அரசியல்வாதிகளே காரணம் என்றும் சமூக வலைதளங்களில் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

  சென்னையில் ஒரு நாள் மழைக்கே சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

  இதனால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். பருவமழைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத அரசியல்வாதிகளே இதற்கு காரணம் என சமூக வலைதளங்களில் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

  சாலைகள் படுமோசம்

  இதுபோன்ற பலத்த மழைக்கு சென்னை சாலைகள் தயாராகவே இருக்காது.. என்கிறது இந்த டிவிட்

  ஏன் நிரந்தர தீர்வு இல்லை

  வடசென்னை, வியாசர்பாடி, பெரம்பூர் பகுதியில் எல்லாம் ஒரு நாள் மழைக்கே வெள்ளம்.. அரசு ஏன் இதற்கு நிரந்தர தீர்வு காண்பதில்லை? என்கிறார் இந்த வலைஞர்

  அக்கறையே இல்லை

  எத்தனை முறை கடும் மழை வந்து சென்னை நகரை புரட்டி போட்டாலும் ஆளும் ஆட்சியாளர்கள் மக்கள் மீது அக்கறை காட்டமாட்டார்கள்..

  நாங்க மனுங்க இல்லயா?

  ஸ்கூல்க்கு மட்டும் லீவு விடுவீங்க.. ஏன் நாங்கல்லாம் மனுஷங்க இல்லயா? வெற்றிகரமாக ஆஃபிஸ் ரீச் ஆகி விட்டேன்.. 2 மணி நேரம் பயணித்துள்ளேன் என்கிறார் இந்த நெட்டிசன்..

  நடுவுல ஒரே ஒரு செங்கல்

  நடுவுல ஒரே ஒரு செங்கல் அந்த பக்கம் தாண்டுனா மழை தண்ணி, இந்த பக்கம் தாண்டுனா சாக்கடை...! சென்னை சாலை.. என்கிறார் இந்த வலைஞர்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens slams politician for chennai flood. For one day rain chennai roads looks like ponds. Water flooded in lowland areas and flooded homes.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற