சென்னை : ஜல்லிக்கட்டு போட்டியில் பதிவு செய்ய வரும் மாடுபிடி வீரர்களும், காளை உரிமையாளர்களும் ஆதார் அட்டையை காண்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு நெட்டிசன்கள் சுடச்சுட கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஜனவரி 14 முதல் 16 வரை மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக பாலமேட்டில் முன்பதிவு செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.
போலீசார் தடியடி நடத்தும் அளவிற்கு மாடுபிடி வீரர்களின் கூட்டம் அள்ளிவிட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளது.
இதனையடுத்து பலரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி ஆதார் அட்டையை எடுத்து வந்து வரிசையில் காத்திருந்து பெயர் பதிவு செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டில் மாடுபிடிக்கவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது குறித்து பலரும் டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றின் சுவாரஸ்ய தொகுப்புகள் சில:
|
பார்வையாளர்களுக்குமா?
ஜல்லிக்கட்டில் தன்னை அடக்க ... கலந்து கொள்ளும் காளைகளுக்கும், பார்வையாளர்களுக்கும் ஆதார் தேவை என சொன்னாலும் சொல்வார்கள் என கிண்டல் செய்துள்ளார் இவர்.
|
அசம்பாவிதங்களை தவிர்க்க
சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டில் பாகிஸ்தானிலிருந்து சில வீரர்கள் வந்து ஏறுதழுவி நம் தமிழ்ப்பெண்களை மணந்து சென்றுள்ளனர்! அவ்வித அசம்பாவிதங்களைத் தவிர்க்க வேண்டி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள ஆதார் எண் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
தமிழ் இளைஞர்கள் சார்பில் அரசுக்கு நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
ஆதார் தான் முக்கியமா?
அப்ப வீரம் முக்கியம் இல்லையா...ஆதார்தான் முக்கியமா....வாடிவாசல்ல இருந்து வர காளையை ஆதார் வச்சா அடக்கமுடியும்... என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
கோழிக்கு எங்க ஆதார் வாங்கலாம்?
ஜல்லிக்கட்டுக்கு ஆதார் கட்டாயம்னு சொல்றாங்க. எங்க வீட்டு கோழிக்கும் ஆதார் வாங்கனும் எங்கனு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் என்று டுவீட்டியுள்ளார் இவர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!