For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமித்ஷா தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு.. ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட்டாகும் #GobackAmitShah

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    தேசிய அளவில் ட்ரெண்டாகும் #GoBackAmitshah ஹேஷ்டேக்- வீடியோ

    சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வரும் நிலையில் அவரை திரும்ப செல்லுமாறு கூறி திமுக ஆதரவு மற்றும் பாஜக எதிர்ப்பு நெட்டிசன்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றன.

    நேற்று திமுக குறித்து விமர்சனம் செய்து இரவு ட்விட்டரில் தேசிய அளவில் ஒரு வார்த்தை ட்ரெண்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை முதல் அமித்ஷாவுக்கு எதிராக தேசிய அளவில் #GobackAmitShah என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு துறை கண்காட்சியை பிரதமர் மோடி திறந்து வைக்க சில வாரங்கள் முன்பாக சென்னை வந்தபோது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். கோபேக் மோடி என்ற வாசகத்தை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இணைப்பின் பின்னணி

    இபிஎஸ்-ஓபிஎஸ் இணைப்பு பின்னணியில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இருந்ததாக கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    மோடிக்கும் இதேபோல

    Modi : அதான் PMனு பாக்காம எனக்கே #GoBackModi னு trend பண்ணாங்கல்ல.. நீங்க வேற ஏன் போனீங்க..
    Amit Shah : அதுல ஒருத்தன் இவங்க எவ்ளோ திட்னாலும் தாங்கறாங்க.. இவங்க ரொம்ப நல்லவங்கனு சொன்னான்.
    இப்படி வடிவேலு பாணியில் கற்பனை உரையாடலை கட்டவிழ்த்துள்ளார் இந்த திமுக அனுதாபி நெட்டிசன்.

    வடிவேலு காமெடி

    மோடி & அமித்ஷா வொய் ப்ளட் #GoBackModi சேம் ப்ளட். என்று மோடியை போலவே அமித்ஷாவை கலாய்ப்பதாக, பிரபுதேவா, வடிவேலு காமெடி காட்சியை வைத்து கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.

    இது தமிழ்நாடு

    #GobackAmitShah என்பது இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்ட் ஆவதை சுட்டிக்காட்டியுள்ள அதிமுக முன்னாள் ஐடி விங்க் நிர்வாகி, ஹரி பிரபாகரன், அமித்ஷா ஜி, இதுதான் தமிழ்நாடு என கூறியுள்ளார்.

    திரைப்பட பஞ்ச்

    "நான் வரலாமா?" "உன்ன நான் போகத்தான் சொன்னேன், வரச்சொல்லலை" என்ற காலா திரைப்பட காட்சியை, அமித்ஷாவை எதிர்க்கும் நெட்டிசன்களோடு ஒப்பிட்டு மீம் வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    English summary
    The hashtag #GobackAmitShah started trending on Twitter on Monday as he is arriving Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X