"ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!"
"குக்கரை போல இருங்கள்.. பிரஷர் அதிகமாகும்போது விசிலடித்து கொண்டாடுங்கள்!" இது சன்டே ஸ்பெஷல் தத்துவம்
சென்னை: ஞாயிறு என்பது ஓய்வு நாள் மட்டுமல்ல.. சாப்பாட்டிற்குமான நாள் என நமது மக்கள் எழுதாமல் எழுதி வைத்து விட்டார்கள்.
அதிலும் குறிப்பாக அசைவப் பிரியர்களுக்கு ஞாயிறு கொண்டாட்டமான நாள் என்று தான் சொல்ல வேண்டும். பறப்பதில் விமானத்தை தவிர, மிதப்பதில் கப்பலைத் தவிர என மீன், கோழி, ஆடு, முட்டை என விதவிதமாக சமைத்தோ அல்லது ஹோட்டலுக்கு சென்றோ சாப்பிட்டால் தான் அந்த நாள் அவர்களுக்கு முழுமை பெறும்.

எனவே ஞாயிறு ஸ்பெஷல் தட்டில் மட்டுமல்ல.. சமூகவலைதளங்களிலும் எதிரொலிக்கும். பெரும்பாலானவர்களின் வாட்ஸப் ஸ்டேட்டஸ்களில் வறுத்த கோழியும், பிரியாணியும், மீனும் தான் மணமணக்கும்.
வழக்கமாக மீம்ஸ்களில் தான் விதவிதமான சாப்பாட்டைப் போட்டு வெறுப்பேற்றுவார்கள் என்றால், இந்த வாரம் சற்று வித்தியாசமாக தத்துவமாக பொழிந்திருக்கிறார்கள்.
இதோ அந்த சாப்பாட்டு தத்துவம் உங்களுக்காக...
- "தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும்!
- ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!
- சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!
- வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!
- பொய் நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!!
- கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!
- தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது...அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்!
- தன்னம்பிக்கைச் சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல ...சமைப்பது உங்கள் கையில்தான்!
- வெற்றி என்பது இட்லியை போல வேகுவது தெரியாது... வெந்தபின் தான் தெரியும்..!
- வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது... நட்பு என்ற சட்னி வேண்டும்...!
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications