என்ன படிச்சு இருக்க.. பக்கோடா விக்கிற அளவுக்கு படிச்சு இருக்கேன்.. கலாய்த்து எடுத்த நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா முழுக்க சில நாள் முன்பு கிச்சடி வைரல் ஆனது. ஆனால் தற்போது ஒரே வாரத்தில் பக்கோடா அதை முந்தி இருக்கிறது. பக்கோடா செய்வது எப்படி என தொடங்கி பக்கோடா பிறந்த வரலாறு வரை எல்லோரும் அது குறித்துதான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

சில நாள் முன்பு தொலைக்காட்சி பேட்டியில் பேசிய பிரதமர் மோடி ''200 ரூபாய் வருமானம் கிடைக்கும்படி பக்கோடா விற்பதும் கூட வேலைவாய்ப்புதான்'' என்றார். அது வைரல் ஆனது

இதே கருத்தை பாஜக தலைவர் அமித் ஷாவும் சொல்லி இருந்தார். தற்போது இது பெரிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.

கடை

இவர் கர்நாடகாவில் விவசாயிகள் குறித்து மோடி பேசியதை வைத்து கிண்டல் செய்துள்ளார். ''கர்நாடகாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தக்காளி, வெங்காயம் , உருளை கிழங்கு உற்பத்திக்கே முன்னுரிமை அளிப்போம் - மோடி...எதுக்கு பக்கோடா கடை போடவா..?'' என்று கேட்டு இருக்கிறார்.

எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா

இவர் வேலையில்லாமல் பக்கோடா விற்பது அவமானமல்ல என அமித்ஷா கூறியதற்கு பதில் அளித்துள்ளார். அதில் ''ஆம் பக்கோடா விற்பது அவமானம் இல்லைதான்... ஆனா படிச்சும் வேலை கிடைக்காமல் பக்கோடா விக்கிற நிலைமைக்கு நாட்டை வச்சிருக்கீங்களே அதான் அவமானம்'' என்றுள்ளார்.

கவித கவித

இவர் இதை கவிதை மாதிரியே ''எல்லோரும் பக்கோடா விற்க ஆரம்பித்தால் யாருக்கு தான் பக்கோடாவை விற்பது?'' என்று கேட்டு இருக்கிறார்.

அதுக்கு ஒரு படிப்பு

இவர் ''பக்கோடா புகழ் ஓங்குக!!! இனி 'PT' னு ஒரு கோர்ஸ் பாடத்திட்டத்தில் ஆரம்பிக்கணும்! பக்கோடா டெக்னலாஜி!! எப்படி design designனா குறைந்த விலையில் அதிக லாபம் தர கூடிய பக்கோடாவை உற்பத்தி பண்ணி கோடீஸ்வரர் ஆகறதுனு!!!'' என்று குறிப்பிட்டுள்ளார்.

வழிமுறை என்ன

இவர் ''புதிதாக பக்கோடா கடை திறக்க என்ன வழிமுறை'' என்று வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கேட்பது போல கேட்டு இருக்கிறார்.

பிஇ படித்து இருக்கேன்

இவர் ''பேரன்ன : மணி., என்ன படிச்சிருக்க ?, பக்கோடா விக்கிற அளவுக்கு பி.இ. படிச்சிருக்கேன்.'' என்று காமெடியாக குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Twitter becomes fire Modi's pakoda speech. Netizen compare everything with Modi's pakoda speech. People posting viral comments on Amith Shah and Modi for their Pakoda speech.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற