துளிகளுக்கு இடையில் நழுவி நனையாமல் வீடு சேர்ந்து விடவேண்டும், பஜ்ஜி வெயிட்டிங் #ChennaiRains

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் கனமழை பெய்தாலும் நெட்டிசன்கள் அதை வரவேற்று கவிதை எழுதியுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பாரபட்சம் இல்லாமல் பெய்து வருகிறது. இன்னும் இரு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு கடும் மழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பெய்த மழைக்கே ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலும் கடமையே கண்ணாயிரமாக வலைஞர்கள் டுவிட்டரில் மழை குறித்த அப்டேட் செய்த வண்ணம் உள்ளனர்.

வாழவைப்பதும் மழை

"கெடுப்பதும் மழை;கெட்டவர்களை மீண்டும் வாழவைப்பதும் மழை" பெருநகரை கெடுத்தாலும் விவசாயத்தை வாழவைப்பதால் மகிழ்ச்சி.

ஆயிரம் கோடி எங்கே

மழை வருடம்தோறும் வரும் அரசு வடிகால் சரிசெய்ய ஒதுக்கும் சில ஆயிரம் கோடிகளை சரியானமுறையில் பயன் படுத்துகிறதா சென்னைவாசிகளே.

வீடு சேர வேண்டும்

துளிகளுக்கு இடையில் நழுவி நனையாமல் வீடு சேர்ந்து விடவேண்டும், பஜ்ஜி வெயிட்டிங்

நோ டிரெயின்ஸ்

சாலைகள் இல்லை, வடிகால்கள் இல்லை, கட்சிக்கு சின்னம் இல்லை, கட்சி இல்லை, அரசாங்கமும் இல்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netisans tweeted their comments and current situation happened in their places on the account of North east monsoon.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற