For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகைக் கவர்ந்த கருந்துளை.. எனக்கென்னமோ ஓட்டை வடை மாதிரியே கீதுபா!

Google Oneindia Tamil News

சென்னை: நம்ம ஆளுங்களுக்கு மூளையே மூளை.. உட்கார்ந்தும் யோசிக்க மாட்டாங்க.. ரூம் போட்டும் யோசிக்க மாட்டாங்க.. அப்படியே தானாகவே அருவி மாதிரி ஐடியா கொட்டுகிறது!

நாசா விஞ்ஞானிகள் ஒரு புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளார்கள். அது விண்வெளியில் உள்ள கருந்துளையின் போட்டோதான். இது தான் கருந்துளையின் முதல் நிஜ புகைப்படம் ஆகும். இதுவரை வெறும் சித்தரிப்பு படங்களைத்தான் நாம் பார்த்து வந்தோம்.

 Viral memes about Black hole image in Social Media

விண்வெளியில் ஒரு மாபெரும் அதிசயம்.. முதல் முறையாக வெளியானது கருந்துளை படம்.. மர்மங்களுக்கு விடைவிண்வெளியில் ஒரு மாபெரும் அதிசயம்.. முதல் முறையாக வெளியானது கருந்துளை படம்.. மர்மங்களுக்கு விடை

துளை.. துளை..ன்னு சொல்லவே அது சின்ன துளைன்னு நெனச்சுக்காதீங்க. நம்ம பூமியின் அளவை விட 3 மில்லியன் சைஸ் அளவுக்கு பெரியதாம்! இதில் நிறைய நட்சத்திரங்கள் இருப்பதாகவும், ஈர்ப்பு விசை இருப்பதாகவும், எதிரில் எது வந்தாலும் உள்ளிழுத்துக் கொள்ளும் அளவுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம்.

இவ்வளவு சீரியஸான ஒரு மேட்டரை உலகம் முழுக்க ஆச்சரியத்துடன், அதிசயித்து பார்த்து வந்தால், நம்ம ஆளுங்களுக்கு ஓட்டை வடை ஞாபகம் வந்துடுச்சு. இந்த கருந்துளை போட்டோவை பார்த்தால், நாம சுடும் ஓட்டை வடை (உளுந்து வடை) மாதிரியே இருக்காம்.

அடுப்பில் காயும் ஒரு ஓட்டை வடையைப் போட்டுக் காட்டி என் கண்ணுக்கு இப்படித்தாம்பா தெரியுது என்று கலாய்த்துள்ளார் இவர்.

இன்னொருவரோ கண்ணாடி போடாமல் இந்த கருந்துகள் போட்டோவை பார்க்கிறார். பிறகு கண்ணாடி போட்டு பார்த்தால் ரெண்டு ஓட்டை வடை அவர் கண்ணுக்கு தெரிகிறதாம்!

இப்படியெல்லாம் நாம யோசிக்கிறது அமெரிக்காவில் இருக்கிற நாசா விஞ்ஞானிகளுக்கு மட்டும் தெரிந்தால்!???

English summary
Viral Tweets, Memes about Black hole image in Social Media
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X