Monday Motivation: நல்லது நினைச்சா நல்லது.. கெட்டது நினைச்சா கெட்டது!
நாம நல்லது நினைச்சா அதை விட பல மடங்கு நல்லது நமக்கு நடக்கும். அதுவே நாம யாருக்காவது கெட்டது நினைச்சோம்னு வைங்களேன்.. அதை விட பல மடங்கு தப்புத் தப்பா நமக்கு நடக்கும்.. அதுவும் உடனே நடக்கும்.. இதெல்லாம் இப்போது நிறையப் பேர் அனுபவிச்சிருப்பீங்க.

முன்னாடி மாதிரில்லாம் இப்ப கிடையாதுங்க.. நாம செய்வதற்கேற்ற பலன்கள் இந்தப் பிறவியிலேயே அதுவும் உடனுக்குடன் கிடைத்து விடுகிறது. இதைத்தான் திருவள்ளுவரும் அழகாக ரத்தினச் சுருக்கமாக இப்படிச் சொல்லியுள்ளார்:-
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்"
அப்படின்னு பளிச்சென்று சொல்லியிருக்கிறார்.. ஒரு குட்டிக்கதை பார்ப்போமா,... இன்னும் எளிமையா உங்களுக்குப் புரியும்.
ராஜூ படிப்பில் படுசுட்டிப் பையன். ஆனால் குறும்புகளின் மன்னன். பள்ளியில் அவன் ஆசிரியர் பெற்றோர்களை அழைத்து அவன் குறும்புத்தனத்தைக் கூறினார். அவன் ஆசிரியர் பாடம் நடத்தினால் அவர் மேல் ராக்கெட் விடுவான். நண்பர்கள் வகுப்பிற்குள் நுழையும் போது அவர்கள் மீது குப்பையைக் கொட்டி விடுவான்.
தீபாவளி சமயம் அது. வீட்டு வாசலில் பட்டாசுகளை வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து வாசலில் வெடித்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக ஒரு நாய் ஓடியது. உடனே அவன் அந்த நாயைப் பிடித்து அதன் வாலில் சரவெடியைக் கட்டிப் பற்ற வைத்தான். அது பட்டாசு வெடிக்கும் போது அங்குமிங்கும் ஓடி பின் அவனைத் துரத்த ஆரம்பித்தது. நாய்க்குப் பயந்து ஓடிய அவன் கல் தடுக்கி அவன் வைத்திருந்த பட்டாசுகள் மீது விழ அவன் மீது நாயும் விழ பட்டாசு வெடித்ததில் அவனுக்குப் பலத்த அடி.
உடனே மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்தான். கண் விழித்துப் பார்த்த போது அழுதுக்கொண்டே அவன் பெற்றோர்கள் எதிரே நின்றிருந்தனர். அப்பொழுது அவன் அம்மா பார்த்தாயா ராஜூ உன்னுடைய குறும்புத்தனத்தால் இன்று உன் நிலையைப் பார் என்றாள். அவன் அம்மாவிடம் சாரிம்மா இனி இப்படி குறும்புத்தனம் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தான்.
அவன் நாய்க்குப் பட்டாசு வைத்து அது துன்பப்படுவதைப் பார்க்க நினைத்தான் ஆனால் இறுதியில் அது அவனுக்கே ஆபத்தாகி விட்டது பார்த்தீர்களா. நாம் பிறருக்கு கேடு நினைத்தால் நமக்கும் கேடு தான் விளையும். அதனால் முடிந்தவரை எல்லோருக்கும் நன்மையைச் செய்யுங்கள் உங்களுக்கும் நல்லதே நடக்கும் சரியா செல்லூஸ்!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications