கனவுகளோடு முடிந்து போகக் கூடாது வாழ்க்கை!
நாம் வாழப் போவது ஒரு வாழ்க்கை.. அதை முழுமையாக வாழ வேண்டும். நமது வாழ்க்கை நல்ல நினைவுகளோடு முடிய வேண்டும்.. நிறைவேறாத கனவுகளுடன் முடியக் கூடாது. வாழ்க்கையை அப்படி வாழ வேண்டும்.
கனவுகள் இல்லா மனிதனே இல்லை. கனவு கண்டவனை விட அக்கனவை மெய்யாக்குபவனே சிறந்த மனிதன். ஒவ்வொரு மனிதனும் தன் கனவுகளை நனவாக்கி மகிழ வேண்டும். மனதின் எண்ணங்களின் வெளிப்பாடே கனவு. அதை அடையும் போது ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது.
கல்பனா சாவ்லாவின் கனவு விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும் என்பதே. பள்ளிப் பருவத்திலேயே அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார். அவருடைய கனவு நனவானது. நம் பிள்ளைகளுக்கும் ஒரு கனவு நிச்சயம் இருக்கும் அந்தக் கனவை நனவாக்க பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

காமராஜர் கண்ட கனவு
ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க வேண்டும் என்பதே காமராஜரின் கனவு. உணவோடு கல்வியையும் கொடுக்க நினைத்தார் அந்த மாமேதை. இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றனர். அவருடைய கனவு நனவானது. அதனால் தான் கல்விக்கண் திறந்தக் காமராஜர் என்று அவரை அழைக்கிறோம்.

விதம் விதமான கனவுகள்
நான் டாக்டராவேன் இன்ஜீனியராவேன் ஓவியராவேன் பாடகராவேன் எழுத்தாளராவேன் பத்திரிகையாளராவேன் ஏன் நான் இந்த நாட்டின் பிரதமராவேன் என்று ஒவ்வொருவருக்கும் பலவிதமான கனவுகள். அக்கனவுகளை நிஜமாக்கிக் கிடைத்த வாழ்க்கையிலேயே அந்த மகிழ்ச்சியை அனுபவித்து விட வேண்டும்.

எதையும் திணிக்காதீர்கள்
மாணவர்களையும் இளைஞர்களையும் அப்துல்கலாம் ஐயா அவர்கள் கனவு காணச் சொனானார்கள். ஏன் தெரியுமா. சிறு வயது முதலேஅவர்கள் கண்ட கனவை நனவாக்கப் பாடுபடுவார்கள். கனவுகளை நிஜமாக்கிப் பட்டாம்பூச்சியைப் போல் சிறகடித்து மகிழ்வார்கள் என்று. பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளிடம் உங்கள் கனவைத் திணிக்காதீர்கள். அவர்களுக்கென்று ஓர் ஆசை ஓர் கனவு இருக்கும் அதை நிறைவேற்ற முடிந்தவரையில் முயற்சி செய்யுங்கள்.

அப்துல் கலாமின் கனவு
அப்துல் கலாம் ஐயா கூறியது போல் இன்று உலக நாடுகள் அனைத்தும் வளர்ந்து வரும் நாடான இந்தியாவிடம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மருந்தினைப் பெறக் காத்துக் கிடக்கிறது. நிச்சயம் அவர் கனவு கண்டது போல் நம் நாடு வல்லரசாகும் காலம் வெகுதொலைவில் இல்லை. கனவுகளை நிஜமாக்கும் சக்தி நம்மிடம் உள்ளது. வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அந்த வாழ்வில் நாம் கண்ட கனவுகளை நனவாக்கி மகிழ்ந்துவிட வேண்டும். உங்களால் முடியும் நம்புங்கள் கனவு மெய்ப்படட்டும்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications