என் கூடவே வா.. தோழனாக.. தோழியாக!
என் முன்னாடி நடக்காதே.. என்னால் உன்னை பின் தொடர முடியாது.. எனக்குப் பின்னால் வராதே.. என்னால் உன்னைத் தலைமை தாங்கிக் கொண்டு செல்ல முடியாது.. எனக்கு சமமாக நடந்து வா.. ஒரு தோழனாக, தோழியாக.. இப்படி ஒரு வாக்கியம் ஆங்கிலத்தில் உண்டு.
உண்மைதான்.. வாழும் இந்த வாழ்க்கையில் அனைவருமே சமம்தான்.. சமத்துவமாகவே நாம் இந்த வாழ்க்கையை வாழ வேண்டும். அதை விட முக்கியமாக ஒரு நல்ல தோழியோ அல்லது தோழனோ இல்லாத வாழ்க்கை.. அது என்ன வாழ்க்கை.. நல்ல தோழர்கள் இல்லாத யாருமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது என்று கூட சொல்லலாம்.

தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாய்ஞ்சுக்கணும் என்பது போல ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு நண்பர் தேவை. உயிருக்கு உற்றத் தோழனாக ஒருவர் நிச்சயம் வேண்டும். உங்கள் பெற்றோரிடமும் ஏன் மனைவியிடமும் சொல்ல முடியாததைக் கூட நண்பர்களிடம் நம்மால் சொல்ல முடியும்.
நல்ல நண்பன் இருந்தால் ஒருவனுக்கு அதைவிட பெரிய சொத்து எதுவுமில்லை. எந்தவொரு இரத்த பந்தமும் இல்லாமல் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி நிற்பவர் நமது நண்பர் மட்டுமே. நம்முடைய சுகதுக்கங்களை அவருடையது போல் பாவிக்க நண்பர்களால் மட்டுமே முடியும்.
பிரபல பாடகர் எஸ்.பி.பி அவர்களின் நண்பர் இசைஞானி இளையராஜா ஆவார். நண்பர்களுக்குள்ளே சண்டை வருவது சகஜம் தான். ஆனால் தன் நண்பன் உயிருக்குப் போராடுகிறான் என்று தெரிந்தவுடன் பாலு சீக்கிரம் வா உனக்காக நான் காத்திருக்கிறேன் நம்முடைய நட்பு தொடர வேண்டும் என்று இசைஞானி அழைத்தார். அதோடு நில்லாமல் நண்பனின் நலனுக்காகப் பிரார்த்தனையும் செய்தார். இப்பொழுதும் நண்பனின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று திருவண்ணாமலையில் மோட்சதீபம் ஏற்றி வழிபடுகிறார்.
நட்பின் சிறப்பைப் பற்றித் திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார். உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்பது போல நல்ல நண்பர்கள் நம்முடன் எப்போதும் இருக்க வேண்டும். நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருங்கள். உங்களுக்கென உருகும் ஜீவன் அவர்கள் தான்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications