கடுமையாக முயன்றால் வெற்றி உனக்கே!

Subscribe to Oneindia Tamil

சில விஷயங்களை நாம் முயன்று கடினமாக உழைத்துத்தான் பெற முடியும். மாபெரும் விஷயங்களையும், வெற்றிகளையும் நாம் எளிதில் அடைய முடியாது. அதற்காக கடுமையாக போராட வேண்டும். முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் அது கை கூடும்.

உழைக்கும் கரங்களே உருவாக்கும் கரங்களே என்பது போல் ஒரு செயலில் நாம் வெற்றி பெற வேண்டுமென்றால் உழைப்பும் முயற்சியும் அவசியம். நம் இலக்கை அடைவதற்கு முயற்சி வேண்டும்.வெற்றி இலக்கை அடையும் வரை நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

work hard to gain success

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது போல நம் இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது பல இடையூறுகள் ஏற்பட்டாலும் நம் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்து போராட வேண்டும். சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றும் வல்லமை நமக்குண்டு என்பதை நாம் உணர வேண்டும். ஒரு முறை ஒரு செயலைச் செய்து தோல்வியடைந்தால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அதிலிருந்த குறையை நிறையாக மாற்றுவதே சிறந்தது.

சிலந்தி வலை பின்னும் போது அது முதல் முறையிலேயே பின்னி விடுவதில்லை தொடர்ந்து முயற்சி செய்து தான் வலையைப் பின்னுகிறது. நாமும் அப்படித்தான் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் போது சில சிரமங்கள் இருக்கும். என் நண்பர் ஒருவர் எழுத்தாளராக விரும்பினார். அவர் குறுங்கதை எழுதுவதில் வல்லவர். ஆனால் அவர் அதில் வல்லவராக இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. அதற்காக அவர் தன் முயற்சியிலிருந்து விலகவில்லை.

ஒரு குழந்தை நடை பயிலும் போது முதல்முறையே அக்குழந்தை நடந்துவிடுவதில்லை. பல முறை கீழே விழுந்து எழுந்து தான் நடக்கக் கற்றுக் கொள்கிறது. முதல் முயற்சியில் ஏற்பட்ட தோல்வியால் அக்குழந்தை அமர்ந்துவிட்டால் அக்குழந்தையால் பிற்காலத்தில் நடக்கவே முடியாது என்ற நிலை ஏற்படும்.

நாமும் அக்குழந்தையைப் போலத்தான். வெற்றி்க்கனியை எட்ட வேண்டும் என்றால் நிச்சயம் கடினமான முயற்சிகளும் பயிற்சிகளும் தேவை. மலையை மடுவாக்கும் சக்தி மனிதனுக்கு உண்டு அதனால் முயற்சி செய்யுங்கள வெற்றி வாகை சூடுங்கள் உங்கள் வாழ்வில் தென்றல் வீசட்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+